குணா படமே அந்த படத்தின் காபிதான்!.. அதை பத்தி கமல் பேச மாட்டார்.. இது வேறயா!.

Kamalhaasan: கமல்ஹாசன் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் வரவேற்பு என்பது மிக தாமதமாகத்தான் கிடைக்கும். கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது வித்தியாசமான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால் அப்படியாக எடுக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விகுறியாக இருந்தது. இதனால் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதே சிரமம் என்று இருந்தது.

guna

அப்படியே கமல்ஹாசன் முயற்சி செய்த வித்தியாசமான திரைப்படங்கள் பல தமிழில் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறலாம். அப்படியான படங்களில் குணா திரைப்படமும் ஒன்று ஆனால் குணா திரைப்படத்தில் கண்மணி அன்போடு காதலன் என்கிற அந்த பாடல் மட்டும் அப்போது முதல் இப்போது வரை பிரபலமாக இருந்து வருகிறது.

குணா படமே காபி:

இந்த நிலையில் தற்சமயம் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அந்த குணா படம் மீண்டும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் குணா திரைப்படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் சத்யேந்திரா சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

sweet-hostage

அதாவது சிலர் அறம் திரைப்படத்தின் காபி தான் மஞ்சுமல் பாய்ஸ் என்று பேசி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியிருந்த சத்தியேந்திரா குணா திரைப்படமே ஸ்வீட் ஹாஸ்டேஜ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் காபி தான்.

அந்த திரைப்படத்தின் கதைப்படி காரில் பெட்ரோல் இல்லாமல் வழியில் லிப்ட் கேட்டு நிற்கும் ஒரு பெண்ணை அழைத்துச் செல்லும் ஒரு நபர் அவளை ஒரு குகையில் அடைத்து வைத்து விடுவார் பிறகு அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் காதலை வைத்து திரைப்படம் செல்லும் என்று கூறுகிறார். அதே கதையை வைத்து தமிழில் குணா காதல் கொண்டேன் என படங்கள் வந்திருக்கின்றன என்று அவர் கூறியிருக்கிறார்.