கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகி வரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கின்றன.
ஏனெனில் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் இருவருமே ஏற்கனவே மணிரத்தினத்துடன் பணிபுரிந்தவர்கள் தான் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கும் இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார் கமல்ஹாசன்.
என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் கூட படத்தின் ப்ரமோஷனுக்காக கமல்ஹாசன் நிறைய பேட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். இந்த நிலையில் தக் லைஃப் என்கிற பெயர் எதற்கு இந்த படத்திற்கு வைக்கப்பட்டது என்பது குறித்து கமலஹாசன் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது தக் லைஃப் என்கிற வசனம் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருக்கிறது. பெரும்பாலும் தக்லைஃப் என்பதை கெத்து மாதிரியான விஷயங்களுக்கு தான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பதை குறிக்கும் ஒரு வசனம் தான் இந்த தக் லைஃப். எனவே இதுதான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். இதற்கு முன்பு மணிரத்தினம் வேறு சில பெயர்களையும் கூறினார்.
அவற்றையெல்லாம் இப்பொழுது கூறினால் சிரிப்பு வரும் ஆனால் அந்தப் பெயருக்கெல்லாம் நான் உடன்படவில்லை எனக்கு இந்த பெயர் தான் பிடித்திருந்தது மணிரத்தினமும் பிறகு இதையே படத்தின் பெயராக வைத்து விட்டார் என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.