இந்தியன் 2 கதை இதுதான்!.. கதையை வெளிப்படுத்திய புதிய போஸ்டர்!..
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் இந்தியன் திரைப்படத்திற்கும் முக்கியமான இடமுண்டு என கூறலாம். இந்தியன் திரைப்படம் வெளியான காலக்கட்டத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 வை இயக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் கதையை பொறுத்தவரை இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகும் கூட லஞ்சத்தின் காரணமாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதனால் பாதிக்கப்படும் சேனாபதி என்னும் சுதந்திர போராட்ட வீரர் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்வதை கருவாக கொண்டிருக்கும் இந்தியன் திரைப்படம்.

இந்தியன் 2 வை பொறுத்தவரை இதில் சேனாபதி தேர்தலில் நடக்கும் மோசடிக்கு எதிராக போராடுபவராக இருப்பார் என கூறப்படுகிறது. தேர்தலில் நடக்கும் மோசடிகள், வாக்கு எந்திரத்தில் நடக்கும் மோசடிகள் ஆகியவற்றுக்கு எதிராகதான் இந்த முறை இந்தியன் போராட போகிறார் என கூறப்படுகிறது.
அதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு ஓட்டு, ஒரு பாரதம் என்னும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.