தொடர்ந்து மூணு தடவை.. நடிகர்களால் நாசமான நடிகை ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை..!
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் அதிகமான பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. ஸ்ரீவித்யா நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆரம்பகால கட்டங்களில் சினிமாவிற்கு வந்த போது ஸ்ரீவித்யா நடிகர் கமலஹாசன் மீது காதல் கொண்டார். இந்த விஷயத்தை கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஸ்ரீவித்யாவும் கூட ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் இருந்து வந்தது. கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஸ்ரீவித்யாவின் வீட்டில் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது.
காதல் பிரிவு:
இதனை தொடர்ந்து ஸ்ரீ வித்யாவை விட்டு பிரிந்தார் கமலஹாசன். இது ஸ்ரீ வித்யாவிற்கு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் கூட அதையெல்லாம் மறைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் ஸ்ரீ வித்யா.
அதற்குப் பிறகு ஜார்ஜ் என்கிற சினிமா துறையை சேர்ந்த நபரின் மீது காதல் கொண்டார் ஸ்ரீ வித்யா. பிறகு அவருக்காக கிறிஸ்துவத்திற்கும் மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் எல்லாம் ஸ்ரீ வித்யாவிற்கு ஆசை இல்லை.
திருமணம் செய்து கொண்டு அவரது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் ஸ்ரீ வித்யாவின் ஆசையாக இருந்தது.
கொடுமையான திருமண வாழ்க்கை:
ஆனால் அவரது வாழ்க்கையை அதற்கு மாறாக அமைந்தது ஜார்ஜ் ஸ்ரீவித்யாவை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க நினைத்தார். எனவே தொடர்ந்து அவரை திரைப்படங்களில் நடிக்க வைத்துக் கொண்டே இருந்தார் ஜார்ஜ்.
இதற்கு நடுவே கர்ப்பமான போதெல்லாம் அவரது குழந்தையை களைத்திருக்கிறார் ஜார்ஜ். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை இப்படி கலைத்திருக்கிறார் ஜார்ஜ். இதனால் ஒவ்வொரு முறை குழந்தை களைக்கும்போதும் அந்த மருத்துவமனையிலேயே கதறி அழுவார் ஸ்ரீவித்யா என்று கூறுகிறார் ஸ்ரீவித்யாவின் அண்ணி.
இப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாகி கடைசியில் அமைதியான ஒரு குடும்ப வாழ்க்கை என்கிற தனது கனவுக உடைந்ததை அறிந்த ஸ்ரீவித்யா கணவனிடம் இருந்து தனது சொத்துக்களையாவது பறிமுதல் செய்ய வேண்டும் என்று விவாகரத்து வாங்கினார்.
அதன் பிறகு உடல் சீர்கெட்டு புற்றுநோய்க்கு உள்ளான ஸ்ரீவித்யா மோசமான நிலையில் தான் மரணம் அடைந்தார். அப்போது சொத்துக்களை ஆதரவற்றவர்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் எழுதி வைத்துவிட்டு இறந்தார் ஸ்ரீவித்யா என்று கூறுகிறார் அவரது அன்னி.