அரசியல்வாதிகள் ஆன்மீகத்தை தொடாமல் இருப்பது நல்லது!.. மாஸ் காட்டிய கமல்ஹாசன்!..

Kamalhaasan: தற்சமயம் நேற்று ராமர் கோவில் திறப்பு நடந்தது தான் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. ஒரு மதத்தாரின் நினைவுச் சின்னத்தை இடித்து இன்னொரு கோயிலை கட்டுவது நியாயமா? என்பதுதான் அதிகபட்ச மக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில் இந்தியாவில் இதுவரை எவ்வளவோ கோவில்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் எழப்படாத சர்ச்சை இப்பொழுது எழுவதற்கு காரணம் மதம் அரசியலானதன் காரணமாகத்தான் ஏனெனில் அரசியல் தலைவர்கள் மூலமாக மதம் தற்சமயம் பரப்பப்பட்டு வருகிறது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

kamalhaasan

கமல்ஹாசனிடம் ராமர் கோவில் திறப்பு குறித்து கேட்ட பொழுது இது பற்றி நான் 30 வருடத்திற்கு முன்பே கூறிவிட்டேன் என்று ஒரு விஷயத்தை கூறியிருந்தார். இதனை அடுத்து நெட்டிசன்கள் 30 வட்டத்திற்கு முன்பு கமல் என்ன கூறினார் என்று பார்க்கும் பொழுது அவர் இப்பொழுது நடப்பதை அப்பொழுதே கூறியது போல சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது பாபர் மசூதியை இடித்தது என்னால் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்று மிக நேரடியாக கூறியிருக்கிறார் கமல். மேலும் ஆன்மிகம் என்பது மக்களுக்கான ஒரு விஷயம் அதை மக்கள் கையில் விட்டு விடுங்கள் அதை வளர்த்தெடுப்பதற்கும் அதை வைத்து பணம் இட்டுவதற்கும் ஓட்டு வாங்குவதற்கும் அரசியல்வாதிகள் அதை பயன்படுத்த வேண்டாம்.

அரசியல்வாதிகள் ஆன்மீகத்தை தொடாமல் இருப்பதே நல்லது என பேசி உள்ளார் இந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது தற்சமயம் அரசியல் கட்சிதான் மத கோவில்களை வளர்த்து வருகிறது அதை அப்பொழுதே கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

Video Link – Click Here