மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக உருவான திரைப்படம்தான் கங்குவா. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார்.
இந்த திரைப்படத்தின் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு கதைக்களத்தை புதிதாக முயற்சி செய்திருந்தனர் கங்குவா பட குழுவினர்.
ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வியை கொடுத்தது. படத்திற்கு முதல் நாள் வந்த எதிர்மறையான விமர்சனம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஆனால் மற்றொருபுறம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் படத்தில் எதுவும் இல்லை என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார் ஞானவேல் ராஜா. அந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதற்கு நடுவே கங்குவா திரைப்படத்தால் ஞானவேல் ராஜாவிற்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதில் பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து கங்குவா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் மொத்தம் வந்த லாபமே 140 கோடி தான் என்று கூறப்படுகிறது. எனவே 160 கோடி ரூபாய் இதனால் ஞானவேல் ராஜாவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.