எஸ்.கேவுக்கு போட்டியா இறங்கி இருக்கார் போல கவின்.. ப்ளடி பெக்கர் டீசரில் இதை கவனிச்சீங்களா?
தமிழில் புதுமுக நடிகர்களாக அறிமுகமாகி தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருந்து வருகிறார்.
நடிகர் கவின் பெரும்பாலும் நல்ல கதைகளம் உள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் அவருக்கு வரவேற்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
ஸ்டார் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் ஒன்று வெளியாகி இருந்தது.
டீசரில் கலக்கிய கவின்:
இந்த டீசலில் பார்க்கும் பொழுது பிச்சைக்காரனாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கவின். இதற்கு முன்பு காக்கிச்சட்டை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இதே மாதிரி ஒரு காட்சியில் பிச்சைக்காரனாக நடித்திருப்பார்.
அதேபோல இந்த திரைப்படத்திலும் இவர் பிச்சைக்காரனாக நடித்துக் கொண்டு வேறு ஏதும் வேலை பார்ப்பார். அதிகபட்சம் போலீஸ் ஆக இருக்க வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது. அவருடைய நடவடிக்கைகள் அப்படியே பிச்சைக்காரனைப் போலவே இருந்தது என்று மக்கள் பலரும் இந்த நடிப்பை புகழ்ந்து வருகின்றனர். தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது பிளடி பக்கர் திரைப்படம்.