திறமை இல்லாதவர்கள் சாதி பெயரை போட்டுக்கிறாங்க.. ஓப்பன் டாக் கொடுத்த கயல் ஆனந்தி…

கயல் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அந்த திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு நிறைய திரைப்பட வாய்ப்பை பெற்றார் ஆனந்தி.

தொடர்ந்து பெரிதாக கவர்ச்சியாக நடிக்காமல் நல்லப்படியாக நடித்து வந்ததால் ஆனந்திக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவரது பெயரை கெடுத்து கொள்ளும் வகையில் அவர் நடித்த திரைப்படம்தான் த்ரிஷா இல்லன்னா நயன் தாரா.

இந்த திரைப்படத்தில் ஆனந்தியின் கதாபாத்திரம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் குறைய துவங்கியது. இப்போது சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளே இல்லாத நடிகையாக இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது மகனுக்கு சாதி இல்லை என்கிற சான்றிதழை வாங்கியிருக்கிறார் கயல் ஆனந்தி. இதுக்குறித்து கயல் ஆனந்தி கூறும்போது நான் என் மகனுக்கு சாதி இல்லை என சான்றிதழ் வாங்கியுள்ளேன். அதுவே நான் அவனுக்கு செய்யும் பெரிய உதவி என நினைக்கிறேன்.

திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள்தான் தன் சாதி பெயரை பின்னால் போட்டு கொள்வார்கள் என கூறியுள்ளார் கயல் ஆனந்தி.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version