பறந்து போ படத்தின் மூன்று நாள் வசூல்..! ஹிட் கொடுத்த இயக்குனர் ராம்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான திரைப்படம் பறந்து போ. இயக்குனர் ராம் ஏற்கனவே கற்றது தமிழ், தங்க மீன்கள் மாதிரியான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் கமர்ஷியல் திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கும்.

இந்த நிலையில் இயக்குனர் ராம் கொஞ்சம் மாறுபட்ட கதை அமைப்பில் இயக்கியிருக்கும் திரைப்படம் பறந்து போ. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதையாக செல்கிறது. அந்த காமெடி கதையின் வழியாக அப்பா மகனின் உறவை பேசுகிறது இந்த படம்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.கடந்த மூன்று நாட்களில் பறந்து போ திரைப்படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் படம் வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

இந்த படம் 3 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சின்ன படத்திற்கு இது ஒரு நல்ல வசூலாகும்.

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version