தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் தொடர்ந்து தமிழில் சின்ன சின்ன இயக்குனர்களுக்கு ரஜினிகாந்த் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். தற்சமயம் கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் அடுத்து தெலுங்கு இயக்குனரான விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி நடித்த சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 90 கோடி ரூபாய் வசூல் செய்தது.
எனவேதான் ரஜினிகாந்த் இவருக்கு வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்திடம் கதை கூறி இருக்கிறார் விவேக் ஆத்ரேயா. விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.