12 முறை அதை செய்த நடிகர் கதறி அழுத கீர்த்தி சுரேஷ்..! பிரபல நடிகரின் சூழ்ச்சி…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கான வரவேற்புகள் என்பதை சினிமாவில் அதிகரிக்க தொடங்கின.
அதற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் இருந்த சினிமாவில் நடிக்கும் போது கீர்த்தி சுரேஷ் மிகவும் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டு நடித்து வந்தார்.
கீர்த்தி சுரேஷ்:
அவர் மாடர்னாக நடித்தாலும் கூட தேர்ந்தெடுக்கும் ஆடைகள் எல்லாம் நாகரீகமான ஆடைகளாகவே இருந்து வந்தன. அநாகரிகமான ஆடைகளையோ அல்லது ஆபாசமான ஆடைகளையோ உடுத்தி கீர்த்தி சுரேஷ் நடிக்காமல் இருந்து வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சர்க்கார் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்தார் கீர்த்தி சுரேஷ்.
அதற்கு பிறகு அவரிடம் தெலுங்கு இயக்குனர்கள் தொடர்ந்து கவர்ச்சியை எதிர்பார்க்கத் தொடங்கினர். இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் அவருக்கு மிகவும் மோசமான அனுபவம் ஒன்று நடந்திருக்கிறது. ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று இவருக்கு இருந்திருக்கிறது.
தமிழ் சினிமா:
படத்திற்கு அது தேவையாக இருந்ததால் கீர்த்தி சுரேஷ் அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நடிகர் அதை பயன்படுத்திக் கொண்டு 12 முறை திரும்பத் திரும்ப அந்த காட்சியை ரீடேக் எடுத்திருக்கிறார். அதனால் 12 முறை திரும்பத் திரும்ப அவருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் இதனால் கதறி அழ துவங்கி விட்டார். 12 முறை முத்தம் கொடுத்தது போதுமா என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார் இதை பார்த்த இயக்குனர் நிலைமையை புரிந்து கொண்டு கீர்த்தி சுரேஷை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதற்கு பிறகு அந்த காட்சி திரும்ப படமாக்கப்படவில்லை. திரும்பவும் அந்த நடிகருடன் நடிக்கவும் மாட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியதாக பேச்சுக்கள் இருக்கின்றன.