ராக்கிபாய்.. ஒரு ராஜ்ஜியத்தின் அஸ்தமனம்! – கேஜிஎஃப் 2 விமர்சனம்!

கடந்த 4 ஆண்டுகளாக தீவிர எதிர்பார்ப்பில் இருந்து வெளியாகியுள்ள கேஜிஎஃப் 2 பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Sultana
KGF 2

யஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கி கடந்த 2018ல் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் கேஜிஎஃப். இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியுள்ளது.

கேஜிஎப்பில் கருடனை கொன்ற பிறகு ராக்கி எப்படி கேஜிஎப்பை கைப்பற்றுகிறான். கேஜிஎப்பை கண்கொத்தி பாம்பாய் சுழன்று வரும் மற்ற வில்லன்களை எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமான இரண்டாம் பாகம்.

பொதுவாக முதல் பாகத்தின் எஃபெக்ட் இரண்டாம் பாகத்தில் இல்லாமல் இரண்டும் இருவேறு படங்கள் போன்று எடுத்து சொதப்பும் நிலையில் இல்லாமல் அதே வேகத்தில் அதே பரபரப்பில் தொடர்ந்து பயணிக்கிறது கேஜிஎப்2. இருக்கும் கதாபாத்திரங்களுக்குள்ளேயே சுற்றாமல் புது கதாபாத்திரங்களையும் கொண்டு வந்து நிமிடத்திற்கு நிமிடம் விறுவிறுப்பை கூட்டியுள்ளார்கள்.

படத்தின் அம்மா சென்டிமெண்ட் காட்சிகளும், ஆக்‌ஷன் காட்சிகளும் மிகப்பெரும் பலமாக இருக்கின்றன. இரண்டையும் ஒரே அளவில் மெயிண்டெய்ன் செய்வதில் பிரசாந்த் நீல் சாதித்துள்ளார். படத்தின் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளுக்கு இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

பரபரப்பாக கதை நகர்ந்தாலும் 3 மணி நேரம் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பது சிலருக்கு அயற்சியை தரலாம். முந்தைய பாகத்தில் சின்னதொரு விஷயத்திற்கு கூட தெளிவாய் ஸ்கெட்ச் போடுவது போன்ற காட்சிகள் இருக்கும். இதில் எல்லாமே வேகவேகமாய் நடந்து முடிந்து விடுவது அந்த துல்லியத்தை மிஸ் செய்தது போல உள்ளது.’மற்றபடி ராக்கியின் மிகப்பெரும் ராஜ்ஜியம் எழுவதையும் வீழ்வதையும் போரடிக்காமல் ஆக்‌ஷன் கலந்த ட்ரீட்டாக அளித்துள்ளது படக்குழு

Refresh