News
1000 கோடி அள்ளிய ராக்கி பாய்..! – மிரண்டும் போன இந்திய சினிமா!
கன்னட இயக்குனரான பிரசாத் நீல் இயக்கத்தில் கன்னட ஸ்டார் யஷ் நடித்த படம் கேஜிஎஃப். இதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் இரண்டாம் பாகமும் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

பல மொழிகளில் வெளியான இந்த படம் கடந்த 14ம் தேதி வெளியான நிலையில் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது

இந்நிலையில் நேற்றைய வசூல் நிலவரப்படி கேஜிஎஃப் 2 உலகம் முழுவதும் மொத்தமாக 1000 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலிருந்து தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்களை தொடர்ந்து ரூ.1000 கோடி வசூலித்த நான்காவது படமாக கேஜிஎஃப்2 படம் சாதனை படைத்துள்ளது.
