kamal vishal

கமல் அன்னைக்கு சொன்னப்ப எல்லோரும் வச்சு செஞ்சோம்!.. இப்ப அதுவே நிஜமாயிடுச்சா!.. கேள்வி கேட்கும் விஷால்!.

News Tamil Cinema News

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் விஷால்.

இந்த இரு படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. எனவே ரத்னம் திரைப்படமும் வரவேற்பை பெறும் திரைப்படமாக இருக்கும் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல இடங்களில் பேசி வருகிறார் விஷால்.

அப்படி அவர் பேசும்போது கமல் குறித்து ஒரு கருத்தை முன் வைத்திருந்தார். அதாவது விஸ்வரூபம் திரைப்படத்தை கமல்ஹாசன் வெளியிடும்போது அதை நேரடியாக டிவி சேனல்களில் வெளியிட முடிவு செய்தார். அதற்கு முன்பே சேரனும் ஜே.கே எனும் நண்பனின் கதை என்கிற திரைப்படத்தை இயக்கி இதே மாதிரி நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்தார்.

vishal1
vishal1

அப்போதெல்லாம் ஓ.டி.டி நிறுவனங்கள் இந்தியாவிற்க்குள் வரவில்லை. எனவே அப்படி நேரடியாக டிவியில் வெளியிடுவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. மேலும் இது திரையரங்க உரிமையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் கமல்ஹாசன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய விஷால் கூறும்போது அப்பவே ஓ.டி.டியை கொண்டு வர முயற்சி செய்தார் கமல்ஹாசன். ஆனால் அவரை எல்லோரும் அவரை வச்சு செஞ்சோம். இப்போ அந்த முறையில்தான் கடைசியில் படம் வெளியாகுது என கூறியிருந்தார்.