டீமன் ஸ்லேயர் !.. ஹசிரா ட்ரைனிங் ஆர்க்!.. வெளியான புது சீசன்!..

Kimetsu No Yaiba Hashira Training Arc – ஜப்பானில் அதிகமாக ராட்சச பிசாசுகள் சுற்றி கொண்டிருக்கின்றன. அவற்றை வேட்டையாடும் குழுவே டீமன் ஸ்லேயர். இப்படிதான் இந்த அனிமே துவங்கியது.

தற்சமயம் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஜப்பான் அனிமேக்களில் டீமன் ஸ்லேயர் முன்னிலை வகிக்கிறது.

முன்கதை:

அமைதியான கிராமத்தில் வாழ்ந்து வரும் டாஞ்சிரோ என்னும் நமது கதாநாயகன் விறகு எடுப்பதற்காக பக்கத்து ஊருக்கு செல்கிறான். அங்கு இருட்டி விடவே அன்று இரவு பொழுதை அந்த ஊரிலேயே கழித்துவிட்டு மறுநாள் வீட்டிற்கு செல்கிறான்.

ஆனால் வீட்டில் அனைவரும் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துகிடக்கின்றனர். அவனது தங்கை மட்டும் பிசாசால் தாக்கப்பட்டும் உயிரோடு இருக்கிறாள். ஆனால் அவளும் ஒரு பிசாசாக இருக்கிறாள். அந்த புள்ளியில் இருந்து பிசாசுகளை வேட்டையாடும் ஒருவனாக மாறுகிறான் டாஞ்சிரோ.

இந்த டீமன் ஸ்லேயரின் நான்காம் பாகம்தான் தற்சமயம் வெளியாகி இருக்கும் டீமன் ஸ்லேயர் ஹசிரா ட்ரைனிங் ஆர்க்.

ஹசிரா ட்ரைனிங் ஆர்க் கதை:

டீமன் ஸ்லேயர்களில் அதிகபட்சமான திறன் கொண்டவர்களை ஹசிரா என அழைப்பார்கள். டாஞ்சிரோவும் அவனோடு கூட இருக்கும் செனிட்சு போன்றவர்களுக்கும் பிசாசுகளை வேட்டையாடும் சக்தி இருந்தாலும் அது ஹசிராக்களுக்கு இருக்கும் அளவிற்கு இருக்காது.

இந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஹசிரா அளவிற்கு சக்தியை பெறுவதற்கான பயிற்சியை அளிப்பதை அடிப்படையாக கொண்டு இந்த சீரிஸ் செல்கிறது. மேலும் டாஞ்சிரோவிற்கு தலையில் இருக்கும் தழும்பிற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

அப்படியான தழும்பை பெற்ற டீமன் ஸ்லேயரால் அதிகப்பட்ச சக்தியை வெளிப்படுத்த முடியும். எனவே ஹசிராக்கள் அந்த தழும்பை பெறுவதற்கான பயிற்சியில் இறங்க வேண்டும்.

ஆக மொத்தம் அனைவரும் தங்கள் சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு இடைவேளியாக இந்த சீசன் இருக்கும். ஆனால் அதற்குள் டீமன்கள் கண்டிப்பாக இவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். எனவே கண்டிப்பாக இந்த சீசனிலும் ஆக்‌ஷன் ப்ளாக்கிற்கு பஞ்சம் இருக்காது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version