அன்னக்கிளி இளையராஜாவோட முதல் படம் கிடையாது!.. அந்த ஜெமினி கணேசன் படம்தான் முதல் படம்!..உண்மையை கூறிய கங்கை அமரன்!.

எந்த ஒரு சினிமா பிரபலத்திற்கும் தமிழ் சினிமாவில் எடுத்த உடனே எல்லாம் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. அந்த வகையில்தான் இசையமைப்பாளர் இளையராஜாவும் சினிமாவிற்கு வந்த உடனேயே பெரிதாக வாய்ப்புகளை பெற்றுவிடுவில்லை.

ஏகப்பட்ட சமயங்களில் வாய்ப்புகளை இழந்துதான் அன்னக்கிளி திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றார். உண்மையிலேயே இளையராஜா இசையமைப்பாளராக முதன் முதலாக அறிமுகமாக இருந்த திரைப்படம் அன்னக்கிளி கிடையாது.

ilayaraja
ilayaraja

முதன் முதலில் அவருக்கு ஜெமினி கணேசன் படம் ஒன்றில்தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் பத்மினி கதாநாயகியாக நடித்தார். இயக்குனர் டி.ஆர் ரகுநாத் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு தீபம் என பெயரிடப்பட்டது.

இதில் இளையராஜா இரண்டு பாடல்களுக்கு இசையமைத்தார். அந்த பாடல்களுக்கு பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதினார். ஆனால் பாதியிலேயே அந்த படம் நின்றுவிட்டது. இதனால் இளையராஜா இசையமைத்த இரண்டு பாடல்களுமே வெளிவரவில்லை என கூறுகிறார் கங்கை அமரன்.

அதன் பிறகு சிவாஜி கணேசன் நடிப்பில் தீபம் என்கிற திரைப்படம் வந்தப்போது அதற்கு இளையராஜாதான் இசையமைத்தார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version