ரஜினியால் நான் இழந்த விஜய் பட வாய்ப்பு.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன காரணத்தை பாருங்க..!
தமிழில் உள்ள பெரிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் உள்ள பிரபலமான ஹீரோக்கள் பலரையும் வைத்து கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் எடுத்திருக்கிறார்.
ஆனால் கே.எஸ் ரவிக்குமார் இயக்காத ஒரு நடிகர் என்றால் அது நடிகர் விஜய்தான் நடிகர் விஜய்யை வைத்து மட்டும் ஏன் கே.எஸ் ரவிக்குமார் ஒரு படம் கூட இயக்கியது கிடையாது என்பது பலருக்குமே இருந்து வரும் கேள்வியாக இருக்கிறது.
ரஜினியால் இழந்த வாய்ப்பு:
இந்த நிலையில் இது குறித்து கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஜயை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் எனக்கு நிறைய முறை வந்தது.
ஆனால் நான் தான் ஒவ்வொரு முறையும் அதை நிராகரித்துவிட்டேன் முக்கியமாக ரஜினியை வைத்து நான் ராணா என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கி வந்தேன். அந்த சமயத்தில்தான் ரஜினிக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் என்னிடம் விஜய் ஒரு படம் செய்யலாம் என்று கேட்டார் ஆனால் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை ரஜினிகாந்த் உடல்நிலை சரியாகி வந்து என்ன சொல்கிறாரோ அதை பொறுத்துதான் அடுத்து படபிடிப்பை கொண்டு செல்ல முடியும்.
விஜய் கேட்ட படம்:
இந்த நிலையில் அதை அப்படியே விட்டுவிட்டு நான் விஜய்யுடன் படம் செய்தால் ஏதோ பணத்திற்காக நான் பணம் பண்ணுகிறேன் என்று ரஜினி நினைத்து விடுவார். எனவே இப்பொழுது என்னால் பண்ண முடியாது என்று நான் விஜய்யிடம் கூறிவிட்டேன்.
இந்த மாதிரி நிறைய தடவை விஜய் படம் பண்ணலாம் என்று கூறிய பொழுதும் என்னால் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.