விஜய்ணாவின் கடைசி படம் லோகேஷ் கூடதான் போல… சீக்ரெட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!..

Lokesh Kanagaraj vijay: விஜய் கட்சி துவங்கியப்பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஒரு அரசியல் வாதியாகவே அவர் மாறினாலும் அவரை நடிகராக பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டுள்ள திரைப்படங்களை மட்டும் நடித்து முடித்துவிட இருப்பதாக விஜய் கூறியுள்ளார். இதனால் எப்படியும் இன்னமும் 2026 தேர்தல் வரை விஜய் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

lokesh kanagaraj

இந்த நிலையில் லியோ திரைப்படம் எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான கதையையும் லோகேஷ் கனகராஜ் எழுதினார் என்று பேச்சு இருந்தது. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் விஜய் அடுத்து லியோ படத்தின் இரண்டாவது பாகம் வருவதற்கு வாய்ப்பில்லை என பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் லியோ 2 கண்டிப்பாக வரும் என்றும் அதற்கு நானும் விஜய்ணாவும் வேற திட்டம் வைத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த திரைப்படம்தான் விஜய்யி இறுதி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.