வலிமை வசூலை ப்ரேக் செய்த லவ் டுடே? –  முதல் படமே இந்த லெவலா?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தில் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நடிகை இவானா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரு காதலர்கள் தங்கள் மொபைலை மாற்றிக்கொள்வதை அடிப்படையாக கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது இந்த படம். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இரண்டாவது படம் லவ் டுடே. 

ஆனால் அறிமுக கதாநாயகனாக அவர் களமிறங்கி இதுவே முதல் படமாகும். 5 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடியை தாண்டி ஹிட் அடித்தது. எனவே இந்த படத்தை தெலுங்கு மொழிக்கு டப்பிங் செய்து தெலுங்கிலும் வெளியிட்டனர்.

தெலுங்கில் வெளியாகி மூன்றே தினங்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது லவ் டுடே. இதற்கு முன்னர் அஜித் நடித்த வலிமை படமும் தெலுங்கில் வெளியானது. ஆனால் வலிமை படம் மூன்று நாட்களில் 6 கோடிதான் வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில் ப்ரதீப் அறிமுக கதாநாயகனாக களமிறங்கி அதற்குள் இப்படி ஒரு வெற்றியை கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

Refresh