கம்மி தியேட்டர்ல வந்தும் இவ்வளவு வசூலா?  தூள் கிளப்பும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்..!

தென்னிந்தியாவில் பிரபல நடிகரான துல்கர் சல்மானின் நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளியை முன்னிட்டு வெளியான ஒரு சில திரைப்படங்களில் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒன்று.

தென்னிந்திய அளவில் இந்த திரைப்படம் வெளியானது. ஆனால் தமிழில் பெரிதாக இந்த படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஏனெனில் தமிழில் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடிபக்கர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது.

இந்த மூன்று திரைப்படங்களுக்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட காரணத்தினால் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு பெரிதாக திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆனாலும் கூட நேற்று வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது.

lucky basker

முதல் நாள் வசூல்:

வங்கியில் நடக்கும் மோசடியை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை வெங்கி அல்துறி என்பவர் இயக்கியிருக்கிறார். துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று வரவேற்பை பெற்ற லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்தியாவில் 7.50 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்து இருக்கிறது. இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி அதிக வசூலை கொடுத்த படங்களின் வரிசையில் தற்சமயம் லக்கி பாஸ்கர் திரைப்படமும் சேர்ந்து இருக்கிறது.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ப்ரிவீவ் ஷோவில் இந்த படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வசூல் கிடைத்தது அதையும் வைத்து பார்க்கும் பொழுது மொத்தமாக 8.50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது லக்கி பாஸ்கர்.