லக்கி பாஸ்கர் இவ்வளவு கொண்டாடப்பட என்ன காரணம்.. லக்கி பாஸ்கர் ஒ.டி.டி விமர்சனம்!.. - Cinepettai

லக்கி பாஸ்கர் இவ்வளவு கொண்டாடப்பட என்ன காரணம்.. லக்கி பாஸ்கர் ஒ.டி.டி விமர்சனம்!..

பொதுவாகவே மோசடி குறித்த கதைகள் மீது மக்களுக்கு அதிக ஈடுப்பாடு உண்டு. என்னதான் அது தவறு என்றாலுமே கூட லாவகமாக பலரையும் ஏமாற்றி ஒருவர் செய்யும் மோசடி அதிக ஈடுப்பாட்டை ஏற்படுத்துகிறது. ஹர்ஷத் மேத்தா என்கிற நபர் பெரும் மோசடிகளை செய்திருந்தார். அதனை அடிப்படையாக கொண்டு Scam 1992 என்கிற சீரிஸ் வெளிவந்து அதிக பிரபலமடைந்தது.

அதே மாதிரியான கதை அமைப்பை கொண்டு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லக்கி பாஸ்கர். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் கதை களமும் வித்தியாசமாக இருக்கிறது. கதைப்படி பாஸ்கர் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த நபராவார். இவர் வங்கியில் கணக்காளராக பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடன் தொல்லை, வறுமை என பல கஷ்டங்களை இவர் சந்தித்து வருகிறார்.

lucky baskhar
lucky baskhar

படத்தின் கதை:

இறுதியாக வங்கியில் அவருக்கு துணை மேலாளர் பதவி கிடைக்க இருக்கிறது. அதன் மூலமாக அதிக வருமானம் வரும் என காத்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அந்த பதவி வேறு ஒரு நபருக்கு செல்கிறது. இதனால் விரக்தியடையும் பாஸ்கருக்கு ஒரு நபரிடம் அறிமுகம் கிடைக்கிறது.

அதன் மூலமாக வங்கி பணத்தை முதலீடு செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறார் பாஸ்கர். இப்படியே போய் இறுதியாக 100 கோடி ரூபாய் இவர் சம்பாதிக்கிறார். அதை எப்படி பாஸ்கர் சம்பாதித்தார் என்பதே படத்தின் கதை.

முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக செல்ல கூடிய ஒரு கதை. எனவே அனைவருக்கும் பிடித்த படமாக லக்கி பாஸ்கர் இருந்து வருகிறது. இது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் பார்த்து கொள்ளலாம்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version