குரைக்காத நாயே கிடையாது.. மணிமேகலை குறித்து பேசிய பாபா மாஸ்டர்.!

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களில் மிக முக்கியமானவராக மணிமேகலை இருந்து வருகிறார். சன் மியூசிக் சேனல் மூலமாக பிரபலமடைந்த மணிமேகலை அதனை தொடர்ந்து விஜய் டிவியில் வரவேற்பை பெற்றார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி அவரது மார்க்கெட்டை இன்னமுமே அதிகரித்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது காமெடிகளுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன. ஆனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் மணிமேகலையின் ஆசையாக இருந்தது.

இந்த நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் தொகுப்பாளராக களம் இறங்கினார் மணிமேகலை. ஆனால் அந்த சீசனில் குக்காக வந்த வி.ஜே பிரியங்காவிற்கும் இவருக்கும் வந்த சண்டையின் காரணமாக இவர் விஜய் டிவியில் இருந்தே விலகினார்.

இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் மணிமேகலை. இந்த மேடையில் பேசிய மணிமேகலை “நான் தொகுப்பாளராக இருந்தப்போது எனக்கு பிராபாமன்ஸ் செய்ய வராது என்றார்கள்.

எனக்கு வராத ஒன்றில் நான் சிறப்பான பெயரை பெற்ற பிறகு இப்போது எனக்கு எப்போதும் வருகிற தொகுத்து வழங்கும் வேலை வராது என்கின்றனர் என இதுக்குறித்து மணிமேகலை பேசியிருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த பாபா மாஸ்டர் உடனே மேடைக்கு வந்து மணிமேகலைக்கு ஆறுதல் கூறினார். மணிமேகலையின் வலி என்னவென்று எனக்கு தெரியும். அவரை முன்னால் வாழ்த்திவிட்டு பின்னால் திட்டுவதை பார்க்க முடிகிறது.

நாய் என்றால் குரைக்கதான் செய்யும். அதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறியுள்ளார் பாபா மாஸ்டர்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version