அஞ்சான் தோல்விக்கு பிறகு சூர்யா செஞ்ச விஷயம்.. வாழ்க்கைல மறக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்.!

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இயக்குனர் லிங்குசாமியின் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வந்தன.

ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார் லிங்குசாமி. அதற்குப் பிறகு அவர் இயக்கிய ரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. லிங்குசாமிக்கும் நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது.

தொடர்ந்து சூர்யா எப்பொழுதும் அவருக்கு உதவி வருகிறார். ஆனால் சூர்யாவின் நடிப்பில் லிங்கு சாமி இயக்கிய அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

surya
surya

அது குறித்து ஒரு பேட்டியில் லிங்குசாமி கூறும் பொழுது அந்த திரைப்படத்தை எடிட் செய்யும்பொழுது சில தவறுகளை செய்து விட்டேன். அதுதான் அந்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று விளக்கினார்.

மேலும் அவர் சூர்யா குறித்து கூறும் பொழுது சூர்யா எனக்கு செய்த உதவியை என்றுமே நான் மறக்க முடியாது அஞ்சான் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு என்னுடைய தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடித்து கொடுப்பதாக சூர்யா கூறினார்.

அந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என்று கூட என்னிடம் அவர் கேட்க வில்லை ஒரு படம் உங்களுக்கு பண்ணி தருகிறேன் என்று உதவி செய்ய முன் வந்தார் என்று அந்த நிகழ்வை விளக்கி இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version