ரஜினி மனைவியாக நடிக்க கொடுத்த சம்பளம்.. வேட்டையன் படத்திற்காக மஞ்சுவாரியர் வாங்கிய சம்பளம் தெரியுமா?

தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வெற்றியை கொடுத்து வரும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் இதுவரை அவர் நடித்த மற்ற திரைப்படங்களில் இருந்து ஒரு மாற்று திரைப்படமாக இருக்கிறது.

கமர்சியல் திரைப்படமாக இருக்கும் அதே சமயம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படமாகவும் வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது.

வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் இணைந்து திரைப்படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

manju warrier

வேட்டையன் படத்தில் சம்பளம்:

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடித்தார். சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து கலக்கி வரும் அஞ்சு வாரியர் சில காலங்களிலேயே தமிழில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்றாலும் கூட மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு கொடுக்கும் சம்பளத்தை விட தமிழில் நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேட்டையன் திரைப்படத்திற்கு இவருக்கு ஒரு கோடியில் இருந்து இரண்டு கோடிக்குள் சம்பளம் வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.