Tag Archives: vettaiyan

என் படத்தோட நிலையை நினைச்சு வருத்தமா இருக்கு… வேட்டையன் குறித்து இயக்குனர் ஞானவேல்..!

சினிமாவைப் பொறுத்தவரை இந்த முதல் நாள் விமர்சனம் என்பது இப்பொழுது பலருக்குமே பிடிக்காத ஒரு விஷயமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்த்தால் தான் அதன் கதை என்னவென்று தெரியும் என்கிற நிலை இருந்தது.

அதனால் ரசிகர்களும் கதை என்னவென்று தெரியாமலேயே திரையரங்கிற்கு சென்று வந்தனர். ஆனால் இப்பொழுது முதல் நாள் விமர்சனம் என்கிற ஒரு விஷயம் வந்துவிட்டது.

இதனை தொடர்ந்து திரைப்படங்கள் எல்லாம் முதல் நாளே விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. முதல் நாள் எதிலும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கும் திரைப்படங்கள் பொதுவாக தோல்வியை காண்கின்றன. இது பல தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

வேட்டையன் படம் குறித்து ஞானவேல்:

vettaiyan

எனவே முதல் நாள் விமர்சனத்தை எப்படியாவது நீக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய் பீம் மாதிரியான வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் இது குறித்து பேசி இருக்கிறார்.

அதில் இவர் கூறும்பொழுது முதல் நாள் விமர்சனம் என்பது நியாயமானதாக இல்லை. ஒரு படம் வெளிவந்த பிறகு அது எப்படிப்பட்ட படம் என்பதை சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்தை வைத்தே முடிவு செய்கின்றனர்.

விமர்சனம் செய்பவர்களுக்கு ஒருவேளை அந்த படம் பிடிக்காமல் இருக்கலாம். அந்த கருத்தை நம்பி மக்கள் படத்தை குறை கூறுகின்றனர். இப்படிதான் வேட்டையன் படத்திற்கும் கள்ளிப்பால் கொடுத்தனர் என்கிறார் இயக்குனர் தா.செ ஞானவேல்.

வேட்டையன் ல பண்ணுன அந்த விஷயத்தை தவறவிட்டுட்டீங்க.. கங்குவா சொதப்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.!

kanguva is a movie directed by Siruthai Siva starring actor Surya. kanguva movie created high expectations among people. But the movie did not live up to that expectation on the first day of its release. Due to this, negative reviews are coming about the film.

திரைப்படங்களைப் பொறுத்தவரை எப்பொழுதுமே அதற்கு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கக் கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கங்குவா திரைப்படம் அமைந்து இருக்கிறது.

ஏனெனில் ஒரு திரைப்படம் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் திரையரங்கிற்கு வரும் பொழுது சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்கு பெரிய ஆவலை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்கள் பெரிதாக எதிர்பார்த்து வரும் பொழுது அந்த விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு பெரிதாக ஒரு ஆச்சரியத்தை கொடுக்காது.

வேட்டையன் செய்த வேலை:

இதனால்தான் கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முன்பு ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியான பொழுது இயக்குனர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை செய்திருந்தார்.

vettaiyan

வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்து அந்த படம் குறித்து பெரிதாக அப்டேட் என்று எதுவுமே வரவில்லை. அதனால் படம் குறித்து மக்களுக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கும் வேட்டையன் என்கிற ஒரு திரைப்படம் வருவதே தெரியாமல் இருந்தது.

ஆனால் மனசிலாயோ என்கிற பாடல் வெளியான பொழுது வேட்டையன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு என்பது அப்பொழுதுதான் அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி சில நாட்களிலேயே படம் திரைக்கு வந்தது.

கங்குவா செய்த தவறு:

இதனால் அதிகமாக எதிர்பார்ப்பு என்பது மக்களுக்கு இல்லை எனவே வேட்டையன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் சரி சூர்யாவும் சரி படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர்.

kanguva

இதனால் அந்த படத்தை பார்க்க வந்த மக்கள் எடுக்கப்பட்ட படத்தை தாண்டி ஒரு விஷயத்தை எதிர்பார்த்து படத்திற்கு வந்து விட்டனர் அது படத்தில் கிடைக்கவில்லை எனும் பொழுது படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கி விட்டன. இது குறித்து சினிமா தொடர்பான ஆட்கள் கூறும் பொழுது படத்தின் பல விஷயங்களை ரகசியமாக வைத்து படத்தை வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

லைக்கா செய்த அந்த தவறு.. பதிலுக்கு வச்சி செய்யும் அஜித்?.. இதுதான் நிலவரமா?

இந்த வருட துவக்கத்தில் இருந்து லைக்கா தயாரித்த நான்கு திரைப்படங்களின் மீதுதான் அவர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் அந்த திரைப்படங்கள் திரைக்கு வருவதன் மூலம் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று லைக்கா நிறுவனம் நம்பி வந்தது.

ஆனால் அப்படி வெளியான இரண்டு திரைப்படங்கள் அவர்களுக்கு தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தன. அதில் முதல் திரைப்படம் ஜனவரியில் வெளியான லால் சலாம் திரைப்படம். பெருந்தோள்வியை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படமும் அவர்களுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த நிலையில் வைக்கா நிறுவனம் மலைபோல் நம்பி இருந்த திரைப்படங்கள் வேட்டையன் மற்றும் விடாமுயற்சி திரைப்படங்கள் தான்.

அஜித் லைகா பிரச்சனை:

வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் நல்ல வசூலை பெற்று கொடுத்தது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

அடுத்த பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படத்திற்கான சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அதற்கு அஜித் ஒரு பத்து நாளாவது கால் சீட் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அஜித் தொடர்ந்து அந்த கால் சீட்டை கொடுக்காமல் மறுத்து வருகிறார். டிசம்பர் மாதம்தான் கால் சீட்டை கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். இதனால் விடாமல் முயற்சி செய்தும் விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதும் சந்தேகம்தான் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

லண்டனில் நடிகர் அஜித் அவருக்கான சொத்து வாங்கும் பொழுது லைக்கா நிறுவனத்திற்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் அஜித் தொடர்ந்து லைக்கா நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் இருந்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

வேட்டையனுக்கு கிடைக்காத அந்த அங்கீகாரம்.. ஜோதிகாவால் அமரனுக்கு கிடைச்சுது..!

Amaran movie has got a great response like Jai Beam movie

தமிழ் சினிமாவில் நிறைய ஆக்சன் திரைப்படங்கள் வந்தாலும் கூட தனித்துவமான திரைப்படம் என்ற பெயரை வாங்குவது தான் இங்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது.

ஏனெனில் ஆக்ஷன் திரைப்படம் என்பது எல்லா மொழிகளிலும் எளிதாக வெற்றியை கொடுத்து விடும். ஆனால் புதிதாக செய்யும் முயற்சி பெரும் வெற்றியை கொடுக்கும் பொழுது தான் அந்த படங்கள் தனித்துவமாக தெரிகின்றன.

அப்படியாக நடிகர் ரஜினி நடித்து வெளியான வேட்டையன் திரைப்படம் இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் அந்த திரைப்படத்தை இயக்கிய தா.செ ஞானவேல் அதற்கு முன்பு எடுத்த ஜெய் பீம் திரைப்படம் ஒரு தனித்துவமான திரைப்படமாக இருந்தது.

amaran

 அமரனுக்கு கிடைத்த வாய்ப்பு:

வேட்டையன் திரைப்படமும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரஜினி நடித்த காரணத்தினால் அந்த திரைப்படம் வழக்கமான ஆக்ஷன் திரைப்படமாக மாறியது. அதில் சில இடங்களில் மட்டுமே அரசியல் பேசப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்சமயம் அந்த இடத்தை அமரன் திரைப்படம் எடுத்திருக்கிறது. இது குறித்து நடிகை ஜோதிகா தெரிவிக்கும் போது அதை தான் தெரிவித்திருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு அதே போலவே ஒரு சிறப்பை பெரும் திரைப்படமாக அமரன் அமைந்துள்ளது என்று ஜோதிகா கூறி இருக்கிறார். ஆனால் அந்த ஒரு இடத்தை வேட்டையன் திரைப்படம் பெறாதது ஒரு வருத்தமான விஷயம் தான்.

வேட்டையன் ராயனை மிஞ்சிய அமரன் திரைப்படம்.. இப்படி ஒரு சாதனையா?

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை வைத்துதான் நடிகர்களின் மார்க்கெட் கணக்கிடப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் வசூல் சாதனை பொறுத்துதான் அவர்களுக்கான சம்பளம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு நடிகரும் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நடிகர் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கிறார் என்றால் அதற்கான மார்க்கெட் தமிழ் சினிமாவில் குறைந்துவிடும்.

ஏனெனில் அந்த அளவிற்கு இங்கு நடிகர்களுக்கான மார்க்கெட் என்பது இருந்து வருகிறது. இதனால்தான் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தாலும் கூட கவின் மணிகண்டன் போன்ற நடிகர்கள் தொடர்ந்து நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் அதிக எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம்.

vettaiyan

அமரன் படத்தின் சாதனை:

அமரன் திரைப்படத்தை பொருத்தவரை முகுந்த் வரதராஜன் என்கிற உண்மையான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் இந்த படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் நாள் புக்கிங் எண்ணிக்கையை பொறுத்தவரை வேட்டையன் இந்தியன் 2, ராயன், மாதிரியான படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவற்றை விட அதிகமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட படமாக அமரன் திரைப்படம் மாறி இருக்கிறது.

அதன்படி

1.TheGreatestOfAllTime – 5,84,000

2.Amaran – 4,78,000

3.Vettaiyan – 4,70,000*

4.Indian2 – 4,03,000

5.Raayan – 2,73,000

6.Thangalaan – 1,98,000

7.CaptainMiller – 1,37,000

8.Ayalaan – 1,15,000

9.Maharaja – 1,15,000

10.Aranmanai 4 – 1,09,000

இந்த திரைப்படங்கள் தான் டாப் 10 திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

 

சொல்லுங்க ரஜினி தம்பி… ரஜினிக்கு போன் போட்டு ஷாக் கொடுத்த சீமான்.. பழக்கத்தோஷத்துல..!

தமிழில் தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதிலும் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.

வழக்கமான ரஜினி படங்கள் போல இல்லாமல் முக்கியமான சமூக கருத்துக்களை பேசும் படமாக வேட்டையன் படமிருந்தது. இதனால் வேட்டையன் படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் ரஜினிகாந்துக்கு போன் செய்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

அப்போது நடந்த சுவாரஸ்யமான உரையாடல் குறித்த சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீமான் பட குழுவிற்கு ஃபோன் செய்து வேட்டையன் படத்தின் வெற்றியை குறித்து பேசியிருக்கிறார். அப்பொழுது இருங்கள் ஒரு நிமிடம் நாங்கள் கான்ஃபிரன்ஸ் போடுகிறோம் எனக்கூறி பட குழு ரஜினிகாந்திடம் கான்பரன்ஸ் போட்டிருக்கிறது.

vettaiyan

வேட்டையன் பட வெற்றி:

ஆனால் சீமான் அதை சுபாஷ்கரன் என்று நினைத்துக் கொண்டு நல்லா இருக்கீங்களா தம்பி என்று கேட்டிருக்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் சார் நான் ரஜினி பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே சீமான் அவரிடம் நான் சுபாஷ்கரன் என நினைத்தேன் ஐயா என கூறியுள்ளார்.

பிறகு இந்த மாதிரி சமூகநீதி படங்களை எல்லாம் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சீமான் ரஜினிகாந்திடம் வலியுறுத்தி இருக்கிறார் ரஜினிகாந்தும் நானும் தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளை தான் இப்பொழுது தேட துவங்கியிருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார் எனவே இனி தொடர்ந்து இந்த மாதிரி ரஜினிகாந்த் படங்களை எதிர்பார்க்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

வேட்டையன் படம் 11 நாள் வசூல் நிலவரம்.! எப்போதுமே சூப்பர் ஸ்டார்தான்..

சமூகநீதி திரைப்படம் இயக்கும் இயக்குனரான தா.செ ஞானவேலின் படைப்பாக வெளிவந்த திரைப்படம்தான் வேட்டையன். வேட்டையன் திரைப்படம் தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது.

இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்கள் தான் வந்திருந்தது. ஆனால் பிரபலமான சினிமா விமர்சகர்கள் அனைவருமே இந்த படத்தை பாராட்டி இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்பு ரஜினி நடித்து வெளியான ஜெயிலர், அண்ணாத்தே மாதிரி எல்லாம் இல்லாமல் இந்த திரைப்படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் நிறைய இருந்தன.

முக்கியமாக படத்தின் துவக்கத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினிகாந்தை பிறகு அதற்கு எதிராக பேசுவது என்பது பலருக்கும் பிடித்த விஷயமாக இருந்தது.

11 நாள் வசூல்:

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் பிறகு அதிக வரவேற்பை பெற துவங்கியது. இந்த படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் வேட்டையன் திரைப்படம் உலகளவில் 330 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது .

படத்தின் பட்ஜெட்டே 250 கோடி ரூபாய் என்று தான் கூறப்படுகிறது ஏற்கனவே சேட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் மூலமே இந்த படத்திற்கு 80 கோடி ரூபாய் வருமானம் வந்துவிட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் தற்சமயம் 330 கோடி ரூபாய் கோடிக்கு ஓடி இருப்பது லைக்காவிற்கு மிகப்பெரிய லாபமாகும். தமிழக அளவில் மட்டுமே இந்த திரைப்படம் 105 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனை இதனை தொடர்ந்து தற்சமயம் இந்த படத்தின் இயக்குனரான தா.செ ஞானவேலுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக வேட்டையன் அமைந்துள்ளது.

ரஜினி மனைவியாக நடிக்க கொடுத்த சம்பளம்.. வேட்டையன் படத்திற்காக மஞ்சுவாரியர் வாங்கிய சம்பளம் தெரியுமா?

தற்சமயம் திரையில் வெளியாகி அதிக வெற்றியை கொடுத்து வரும் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் இதுவரை அவர் நடித்த மற்ற திரைப்படங்களில் இருந்து ஒரு மாற்று திரைப்படமாக இருக்கிறது.

கமர்சியல் திரைப்படமாக இருக்கும் அதே சமயம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படமாகவும் வேட்டையன் திரைப்படம் இருந்து வருகிறது.

வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்து ரஜினிகாந்த் மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் இணைந்து திரைப்படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

manju warrier

வேட்டையன் படத்தில் சம்பளம்:

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடித்தார். சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து கலக்கி வரும் அஞ்சு வாரியர் சில காலங்களிலேயே தமிழில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்றாலும் கூட மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு கொடுக்கும் சம்பளத்தை விட தமிழில் நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேட்டையன் திரைப்படத்திற்கு இவருக்கு ஒரு கோடியில் இருந்து இரண்டு கோடிக்குள் சம்பளம் வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அவரை நான் காதலித்தேன்… காதலர் குறித்த உண்மையை கூறிய துஷாரா விஜயன்.!

நல்ல நல்ல திரை கதைகளாக தேர்ந்தெடுத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பை பிடித்து வருகிறார் நடிகை துஷாரா விஜயன்.

பெரும்பாலும் துஷாரா விஜயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதற்கான முக்கிய காரணம் அவரது நடிப்பு தான். மற்ற நடிகைகள் போல இல்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்களில் துஷாரா விஜயன் ஒரு தனிப்பட்ட கதாபாத்திரமாக மக்கள் மத்தியில் தெரிவார்.

அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் துஷாரா விஜயன். சார்பாட்டா பரம்பரை திரைப்படத்திலேயே அவருடைய கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

dushara vijayan

துஷாரா விஜயன் காதல்:

தொடர்ந்து ராயன் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒட்டுமொத்த கதையுமே அவரை மையமாக வைத்து தான் உருவாகி இருந்தது. அந்த திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருந்தார். பத்து நிமிடம் வரும் கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்பது துஷாரா விஜயனின் எண்ணமாக இருக்கிறது.

dushara vijayan

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் யாரையாவது காதலித்து உள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த துஷாரா விஜயன் எனது வாழ்க்கையில் நிறைய நபர்களை நான் காதலித்திருக்கிறேன். சமீபத்தில் கூட ஒருவரை காதலித்தேன் என்று கூறியிருக்கிறார் சமீபத்தில் யாரை காதலித்தீர்கள் என்று கேட்ட பொழுது அதற்கு அவர் விடையே கூறவில்லை. அது யாராக இருக்கும் என்பதே இப்பொழுது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

ரஜினியை வைத்து போட்ட பெரிய ப்ளான்.. சிக்கிய தமிழ் ராக்கர்ஸ் குழு..!

இணையதளத்தின் வளர்ச்சியை தொடர்ந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரும் திரைப்படங்கள் எல்லாமே இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஓ.டி.டியில் வெளியாகும் படங்களை கூட திருடி அவற்றை தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில தளங்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனால் சில திரைப்படங்கள் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் வெகு நாட்களாகவே தமிழ் ராக்கர்ஸை சேர்ந்த ஆட்களை கைது செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் ராக்கர்ஸ் என்பது ஒரு ஆள் மட்டும் வைத்து நடத்தும் தனிப்பட்ட தளம் கிடையாது.

vettaiyan

கோடிகளில் சம்பாதித்த இளைஞர்:

இதில் பல பேர் இருக்கின்றனர் அதனால் யாராவது ஒருவரை கைது செய்தால் மட்டும் அதன் மூலம் அதில் வெளியாகும் படங்களை நிறுத்தி விட முடியாது.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வேட்டையன் திரைப்படத்தை வெளியிட காரணமாக இருந்த நபர்கள் மாட்டிக் கொண்டனர். படுக்கும் வசதி கொண்ட திரையரங்குகளுக்கு சென்று அங்கு இந்த படத்தை இவர்கள் பதிவு செய்வதாக கூறுகின்றனர்.

மேலும் வேட்டையன் திரைப்படத்தை வெளியிட்டு அதன் மூலம் கோடிகளில் இவர்கள் சம்பாதித்து இருக்கின்றனர் இந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேட்டையன் பார்த்துட்டு விஜய் சொன்ன அந்த வார்த்தை?.. உண்மையை கூறிய வெங்கட் பிரபு.!

இதுவரை தமிழில் வந்த பெரிய நடிகர்களின் போலீஸ் திரைப்படங்களில் மாறுபட்ட திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது. பொதுவாக போலீஸ்கள் செய்யும் என்கவுண்டர் போன்ற விஷயங்களை ஒரு மாஸான விஷயமாகதான் படங்களில் காட்டி வந்துள்ளனர்.

அது தவறு என்று கதாநாயகனே ஒப்புக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது வேட்டையன் படத்தின் கதை. இதனால் வேட்டையன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வேட்டையன் படத்தின் மொத்த பட்ஜெட் 250 கோடி ஆகும்.

அதில் முதல் நாளே 80 கோடியை வசூல் செய்திருக்கிறது வேட்டையன் திரைப்படம் அது இல்லாமல் ஓடிடி உரிமம். சேட்டிலைட் உரிமம் போன்றவற்றை சேர்க்கும் பொழுது ஏற்கனவே படத்தில் போட்ட காசு கிடைத்துவிட்டது என்று கூறப்படுகிறது.

vettaiyan

வேட்டையன் படம் குறித்து விஜய்:

இனிமேல் படத்தில் லாபம் வர வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தை பார்ப்பதற்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் வெங்கட் பிரபுவும் விஜய்யும் சேர்ந்து வேட்டையன் திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு வந்திருந்தனர்.

வேட்டையன் திரைப்படம் குறித்து விஜய் உங்களிடம் என்ன கூறினார் என்று வெங்கட் பிரபுவிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு நாங்கள் ரொம்ப என்ஜாய் பண்ணி அந்த திரைப்படத்தை பார்த்தோம்.

விஜய்க்கு ரொம்ப பிடித்திருந்தது எப்போதுமே நாங்கள் தலைவர் ரசிகர் தானே என்று வெளிப்படையாக கூறியிருந்தார் வெங்கட் பிரபு. விஜய் தலைவர் ரசிகராக இருந்தாலும் விஜய்யின் ரசிகர்கள் எப்பொழுதும் ரஜினியை கேலி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று இதற்கு ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

ரஜினி படத்துலையும் இதெல்லாம் பேச முடியும்.. வேட்டையன் படத்தில் சொன்ன அந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

என்னதான் சமூகநீதி இயக்குனர்களாக இருந்தாலும் கூட பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கும்போது அதில் சமூக நீதியை பெரிதாக பேசமாட்டார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே ஜெய் பீம் என்கிற சமூகநீதி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் தா.செ ஞானவேல் இவர் ரஜினியை வைத்து இயக்கியிருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் இவர் சமூகநீதியை பேசி இருப்பாரா என்பது பலரது கேள்வியாக இருந்தது. மொத்த திரைப்படத்திலும் ஒரு 20 நிமிடம்தான் முக்கியமான விஷயங்களை தா.செ ஞானவேல் பேசியிருந்தார். மற்றபடி இது முழுக்க முழுக்க ரஜினி படமாகதான் தயாராகி இருந்தது.

ரஜினி படத்தில் இதை பேசலாம்:

ஆனால் நடுவே பேச வேண்டிய முக்கியமான விஷயங்களை தாசே ஞானவேல் பேசியிருந்ததை பார்க்க முடிந்தது. முக்கியமாக முதல் பாதியில் படத்தில் ரஜினிதான் பல தவறுகளை செய்பவராக இருப்பார். பிறகு அவரே மனம் திருந்துபவராக வைத்திருந்தது நன்றாக இருந்தது.

vettaiyan

மேலும் பல காட்சிகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கு என்கவுண்டர்கள் நிகழ்கின்றன. என்றைக்குமே ஒரு பணக்காரனை ஏன் என்கவுண்டர் செய்ததில்லை என்கிற ஒரு மிக வலுவான கேள்வியை எழுப்பி இருந்தார் ஞானவேல்.

அதேபோல சேரி மக்கள் என்றாலே அவர்களை தவறாக பார்க்கும் கண்ணோட்டத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தார். இந்த விஷயங்கள் எல்லாம் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான விஷயமாக இருக்கின்றன இதனை அடுத்து வேட்டையன் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.