தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கம்ல்ஹாசன். தொடர்ந்து கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப்.
இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து விழாவில் பேசிய கமல்ஹாசன் பேசிய ஒரு விஷயம்தான் அதிக வைரலாகி வருகிறது.
அதில் பேசிய கமல்ஹாசன் கூறும்போது தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியிருந்தார். இந்த நிலையில் கன்னட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கமல் பேசிய இந்த விஷயம் குறித்து சமீபத்தில் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் தெலுங்கு மலையாளம் மாதிரியான மொழிகள் எல்லாம் உருவானது.
இது முன்பு நமது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிலேயே வரிகளாக இருந்தன ஆனால் அது அந்த மக்களின் மனதை புண்படுத்தும் என்று கலைஞர் அதை நீக்கிவிட்டார். அதைதான் இப்பொழுது கமலஹாசன் திரும்ப கூறியிருக்கிறார். கமல்ஹாசன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான் அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை அவர்கள் தங்கள் மொழியின் வரலாற்றை அறிந்து வைத்திருக்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறார் சீமான்.