Tag Archives: seeman

அந்த விஷயத்தை கலைஞர் மறைச்சிட்டார்.. கமல் வெளிக்கொண்டுவந்தார்.. சீமான் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கம்ல்ஹாசன். தொடர்ந்து கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப்.

இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து விழாவில் பேசிய கமல்ஹாசன் பேசிய ஒரு விஷயம்தான் அதிக வைரலாகி வருகிறது.

அதில் பேசிய கமல்ஹாசன் கூறும்போது தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியிருந்தார். இந்த நிலையில் கன்னட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கமல் பேசிய இந்த விஷயம் குறித்து சமீபத்தில் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் தெலுங்கு மலையாளம் மாதிரியான மொழிகள் எல்லாம் உருவானது.

இது முன்பு நமது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிலேயே வரிகளாக இருந்தன ஆனால் அது அந்த மக்களின் மனதை புண்படுத்தும் என்று கலைஞர் அதை நீக்கிவிட்டார். அதைதான் இப்பொழுது கமலஹாசன் திரும்ப கூறியிருக்கிறார். கமல்ஹாசன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான் அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை அவர்கள் தங்கள் மொழியின் வரலாற்றை அறிந்து வைத்திருக்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறார் சீமான்.

ரஜினியோடு சீமான் போட்ட மீட்டிங்.. விஜய்க்கு எதிராக புது திட்டம்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அது குறித்த விஷயங்கள்தான் அதிகமாக அரசியலிலும் சினிமாவிலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் மற்ற கட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் கூட விஜய்யின் கட்சிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகரித்திருக்கிறது.

அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாடு இருந்தது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை மாநாட்டில் கூறுவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் சமீபத்தில் விஜய் கட்சிக்கான மாநாடு நடந்தது அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக விஜய்க்கு தமிழ்நாட்டில எவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்கிறது என்பது அரசியல் கட்சிகளுக்கு புரிய துவங்கியிருக்கிறது.

vijay tvk

மாறிய சீமான்:

முக்கியமாக தமிழ்நாட்டில் தற்சமயம் முக்கிய கட்சியாக கால் பதித்து வரும் நாம் தமிழர் கட்சி மாதிரியான கட்சிகளில் இளைஞர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் விஜயின் கட்சி பக்கம் செல்லும் பட்சத்தில் அது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய இழப்பாக அமையும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் ஆரம்பம் முதலே தமிழர் இல்லை என்று கூறி ரஜினிகாந்தை அதிகமாக விமர்சித்து வந்தார் சீமான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்கிற பொழுது கூட ரஜினியை எதிர்த்து பேசியிருந்தார் சீமான். ஆனால் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வந்த பொழுது ரஜினியை பாராட்டி அவர் பேசியிருந்தார்.

இந்த மாதிரியான சமூக நீதி படங்களில் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் சீமான் ரஜினியை சந்தித்து நேரில் பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து ரஜினியோடு ஆதரவாக பேசுவதன் மூலமாக ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார் சீமான் என்று பேச்சுக்கள் எழ துவங்கி இருக்கின்றன.

இதன் மூலம் விஜய்க்கு எதிராக ஒரு கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாக முடியும் என்றும் பேசப்படுகிறது

 

ஆரம்பத்துல இருந்த சாபாஸ்டியன் சைமன் பத்தி தெரியுமா? முருகனையே பிடிக்காது.. சீமான் குறித்து பேசிய நடிகை விஜயலெட்சுமி..!

தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களை கொண்ட முக்கிய கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்றாகும். ஆனால் எப்பொழுதுமே நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை என்பது இருந்து கொண்டே தான் இருக்கும்.

திரு சீமான் அவர்களுக்கும் சினிமா நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். நடிகை விஜயலட்சுமி இது குறித்து நிறைய பேட்டிகளில் கூறி இருக்கிறார். எப்போதுமே திரு சீமான் ஒரு கிறிஸ்தவர் என்றும் ஆரம்பத்தில் அவர் கிறிஸ்தவராக இருந்து பிறகு இந்து மதத்திற்கு மாறினார் என்றும் பேச்சுக்கள் உண்டு.

இந்த நிலையில் இதுகுறித்து முத்துலெட்சுமி கூறிய விஷயங்கள் தற்சமயம் அதிர்ச்சியை ஊட்டுவதாக இருக்கின்றன. முத்துலட்சுமி ஒரு பேட்டியில் கூறும்பொழுது சீமானும் நானும் காதலித்து வந்த பொழுது ஆரம்பத்தில் இருந்து எங்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை.

சீமானின் கடந்த காலம்:

vijayalakshmi

படப்பிடிப்புக்காக ஒரு முறை பழனிக்கு சென்றிருந்த பொழுது நான் முருகனை தரிசித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஏனெனில் பழனிக்கு சென்றால் கண்டிப்பாக முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்காக நான் தரிசிக்க சென்றேன்.

ஆனால் சீமான் என்னை அதற்கு விடவில்லை. நான் முருகனை வணங்க கூடாது என்று அவர் கூறிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.  இது குறித்து கேட்ட தொகுப்பாளர் சீமான் முருகனுக்கு ஆதரவான ஆள் தானே, எப்பொழுதும் மேடையில் முருகன் குறித்து தானே பேசுகிறார்.

அவர் ஏன் உங்களை முருகனை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கேட்டார் அதற்கு பதில் அளித்த முத்துலெட்சுமி அப்போதைய காலகட்டத்தில் சீமான் கிறிஸ்துவராக இருந்தார். அவர் அப்பொழுது நிறைய முறை போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அப்பொழுதெல்லாம் அவருடைய பெயர் சாபாஸ்டியன் சைமன் என்று தான் எழுதப்பட்டிருக்கும்.

அதனால் அப்பொழுது அவர் முருகனை வணங்க கூடாது என்று கூறி வந்தார் என்று கூறியிருக்கிறார் முத்து லட்சுமி. இந்த நிலையில் தான் சீமான் இப்பொழுது முருகனுக்கு ஆதரவாக இருக்கிறாரா என்று இதுக்குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

திட்டி தீர்த்த அண்ணனுக்கு அன்பை பொழிந்த தம்பி… சீமான் பேச்சுக்கு விஜய் கொடுத்த பதில்..!

விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அவரது அரசியல் நகர்வுகள் குறித்து தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தார் போல விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய விஜய் அதில் பேசிய விஷயங்கள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தின.

பெரும்பாலும் இசை வெளியீட்டு விழாக்களில் கூட விஜய் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி பார்க்க முடியாது அப்படி இருக்கும்பொழுது இந்த மாநாட்டில் பலரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது விஜயின் பேச்சு.

ஒரு பக்கம் மக்கள் மத்தியில் அது வரவேற்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட அரசியல் கட்சிகள் மத்தியில் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சீமான் மிகவும் கடுமையாக விஜய்யை தாக்கி பேசியிருந்தார்.

விஜய்யின் பதில் நடவடிக்கை:

அதில் அவர் பேசும் பொழுது தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் இரண்டும் தன்னுடைய இரு கண்கள் என்று விஜய் கூறியிருந்தார். அதை விமர்சித்த சீமான் ஒன்று சாலையில் இந்த பக்கம் நிற்க வேண்டும் அல்லது அந்த பக்கம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரி ஏரி விபத்து தான் ஏற்படும் என்று விமர்சித்திருந்தார்.

ஆனாலும் கூட அதற்கு எதிர்வினை ஆற்றாத விஜய் தனது ரசிகர்களுக்கு சீமானை விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் சமீபத்தில் சீமானுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் சீமானுக்கு வாழ்த்துக்கள் கூறி பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார் விஜய்.

விஜய் மேடையில் பேசும் பொழுது வெறுப்பு அரசியலை விதைப்பது நம்முடைய நோக்கம் கிடையாது அதை நாம் எப்பொழுதும் செய்யப்போவதும் இல்லை என்று கூறியிருந்தார். அந்த பேச்சுக்கு தகுந்தவாறு எந்த ஒரு அரசியல் தலைவர்களிடமும் பெரிதாக வெறுப்பு காட்டாமல் இருந்து வருகிறார் விஜய்.

பல வருட பகை..! விஜய் சீமான் சண்டைக்கு பின்னால் உள்ள வரலாறு..!

சமீபத்தில் விஜய் மாநாட்டில் பேசிய விஷயங்கள் அரசியல்வாதிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் பொதுவாகவே விஜய் மிகவும் அமைதியான நபர் என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் தடாலடியாக பல அரசியல் கட்சிகளை விமர்சித்து மாநாட்டில் பேசியிருந்தார்.

அதில் திமுகவையும் நாம் தமிழர் கட்சியையும் அதிகமாகவே விமர்சித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமானும் பேசியிருந்தார். ஆனால் இந்த பிரச்சனை விஜய்க்கும் சீமானுக்கும் இப்பொழுது உருவானது கிடையாது.

vijay tvk

விஜய் சீமான் பிரச்சனை:

இது பல வருடங்களுக்கு முன்பே உருவான பிரச்சனையாகும். விஜய்யை வைத்து சீமான் பகலவன் என்கிற திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்யும் நடிப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் பல நாட்கள் கால் சீட் கொடுக்காமல் சீமானை அலைக்கழித்து வந்தார் விஜய். இதனால் அப்பொழுதே விஜயின் மீது கோபமாக இருந்தார் சீமான். அதன் பிறகு பலமுறை விஜயுடன் நட்பாக போவதற்கு சீமான் நினைத்தும் கூட அதற்கு விஜய் அனுமதிக்கவில்லை என்று இது குறித்து கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன்.

எனவே இதுதான் சீமான் மற்றும் விஜயின் இப்போதைய நிலை. அதனால் இதுதான் இப்பொழுது சீமான் விஜயை எதிரியாக பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்

 

 

நடுவில் நின்னு செத்துபோ*டாத? விஜய்க்கு பதிலடி கொடுத்த சீமானின் பேச்சு..!

சமீபத்தில் தவெக கட்சியின் மாநாடு விக்கிரவாண்டில் நடந்தது. அதில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை பேசி இருந்தார். மேலும் அதில் நிறைய கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருந்தார் விஜய்.

அதில் பேசும் பொழுது திமுக குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி குறித்தும் பேசியிருந்தார். திமுகவின் திராவிட அரசியல் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசியவாத அரசியல் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

அப்படி பேசும் பொழுது திராவிடமும் தமிழ் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள். ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு பிளவுவாத அரசியல் செய்பவர்களைதான் நான் பேசுகிறேனே தவிர அந்த தத்துவங்களை நான் தவறு என்று கூறவில்லை என்று கூறியிருந்தார்.

விஜய் குறித்து சீமான்:

விஜய் இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சீமான் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் பேசிய சீமான் கூறும் பொழுது தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று கிடையாது. பல விஷயங்களை தமிழ் தேசியம் எதிர்த்து நிற்கிறது.

எந்த விஷயத்தை எல்லாம் தமிழ் தேசியம் எதிர்க்கிறதோ அதற்கெல்லாம் ஆதரவாகதான் திராவிட சித்தாந்தம் நிற்கிறது. எனவே அது இரண்டும் ஒன்று கிடையாது.

நான் பிறக்கும் பொழுது எனது எதிரி யார் என்று முடிவு செய்துவிட்டு பிறந்தவன். உங்களை போல ஏசி அறையில் அமர்ந்து போராட்டத்திற்கு வந்தவன் அல்ல. நான் சிறையில் இருந்து விட்டு வந்தவன் என்று பேசி இருந்தார் சீமான்.

மேலும் ஏதாவது ஒரு கருத்துக்கு ஆதரவாக நிற்க வேண்டும் அதை விட்டுட்டு சாலையின் இந்த மூலையிலும் இல்லாமல் அந்த மூலையிலும் இல்லாமல் நடுவில் நின்றால் அடிபட்டு தான் சாக வேண்டும் என்று வெளிப்படையாக விஜய்யை திட்டி இருந்தார் சீமான். சீமானின் இந்த பேச்சு இப்பொழுது வைரலாக துவங்கி இருக்கிறது.

சொல்லுங்க ரஜினி தம்பி… ரஜினிக்கு போன் போட்டு ஷாக் கொடுத்த சீமான்.. பழக்கத்தோஷத்துல..!

தமிழில் தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதிலும் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.

வழக்கமான ரஜினி படங்கள் போல இல்லாமல் முக்கியமான சமூக கருத்துக்களை பேசும் படமாக வேட்டையன் படமிருந்தது. இதனால் வேட்டையன் படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் ரஜினிகாந்துக்கு போன் செய்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

அப்போது நடந்த சுவாரஸ்யமான உரையாடல் குறித்த சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீமான் பட குழுவிற்கு ஃபோன் செய்து வேட்டையன் படத்தின் வெற்றியை குறித்து பேசியிருக்கிறார். அப்பொழுது இருங்கள் ஒரு நிமிடம் நாங்கள் கான்ஃபிரன்ஸ் போடுகிறோம் எனக்கூறி பட குழு ரஜினிகாந்திடம் கான்பரன்ஸ் போட்டிருக்கிறது.

vettaiyan

வேட்டையன் பட வெற்றி:

ஆனால் சீமான் அதை சுபாஷ்கரன் என்று நினைத்துக் கொண்டு நல்லா இருக்கீங்களா தம்பி என்று கேட்டிருக்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் சார் நான் ரஜினி பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே சீமான் அவரிடம் நான் சுபாஷ்கரன் என நினைத்தேன் ஐயா என கூறியுள்ளார்.

பிறகு இந்த மாதிரி சமூகநீதி படங்களை எல்லாம் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சீமான் ரஜினிகாந்திடம் வலியுறுத்தி இருக்கிறார் ரஜினிகாந்தும் நானும் தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளை தான் இப்பொழுது தேட துவங்கியிருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார் எனவே இனி தொடர்ந்து இந்த மாதிரி ரஜினிகாந்த் படங்களை எதிர்பார்க்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

எம்.ஜி.ஆர் அப்ப ஜெயிச்சதுக்கு முக்கிய காரணமே வேற!.. சீமான் கொடுத்த விளக்கம்!.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது அரசியலிலும் பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். அரசியல் வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அளவிலான வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் கட்சி துவங்கிய உடனே மக்களிடம் வரவேற்பை பெற துவங்கினார்.

அதற்கு பிறகு ஏராளமான நடிகர்கள் எம்.ஜி.ஆரை போலவே அரசியலுக்கு வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் யாராலும் எம்.ஜி.ஆரின் இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இதுக்குறித்து அரசியல்வாதி சீமான் கூறும்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனப்போது அறிஞர் அண்ணா, காமராஜர், ராஜாஜி மாதிரி தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் ஆளுமைகள் பலர் வரிசையாக மரணமடைந்தனர்.

mgr

இதனால் அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அதில் கருணாநிதி மட்டுமே இருந்து வந்தார். எனவே இந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு ஆளாக எம்.ஜி.ஆர் இருந்துவிட்டார். எனவேதான் தேர்தலில் நின்ற முதல் முறையே அவர் ஜெயித்துவிட்டார் என்கிறார் சீமான்.

மேலும் இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் அப்படி ஜெயிக்க முடியாது. ஏனெனில் மக்கள் உலக அரசியலை உள்ளங்கையில் வைத்துள்ளனர். அவர்கள் தினசரி செய்திகளை படிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது என்கிறார் சீமான்.

மறைமுகமாக சீமானுக்கு ஓட்டு கேட்ட நடிகர் விஜய்!.. என்ன தளபதி இதெல்லாம்!..

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கினார்.

vijay bussy anand

2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வரைதான் விஜய் நடிப்பார் என்று பேச்சுக்கள் இருந்து வருவதால் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று இணையத்தில் வெளியானது.

விசில் போடு என்ற பெயரில் வெளியான இந்த பாடல் அதிகமான அரசியல் கருத்துக்களை பேசும் பாடலாக இருந்து வந்தது. இந்த நிலையில் விசில் போடு பாடலுக்காக வெளியான போஸ்டரில் சீமானின் சின்னமான மைக் சின்னம் இடம் பெற்றிருந்தது.

இதன் மூலம் சீமானுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் விஜய் என பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் அதையே பேசியிருப்பது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாதவன்கிட்ட கெஞ்சினேன்! அவன் ஒத்துக்கல! – தம்பி திரைப்படம் குறித்து சீமான் வெளியிட்ட உண்மை!

தற்சமயம் அரசியலில் பெரும் புள்ளியாக இருந்து வரும் சீமான் தமிழில் முதலில் இயக்குனராகதான் அறிமுகமானார். இயக்குனராக அவரது சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

அதில் குறிப்பிட்டு சொல்லும் படியான திரைப்படம் என்றால் மாதவன் நடித்த தம்பி திரைப்படத்தை கூறலாம். தம்பி திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கும் கூட அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைத்தன.

முதலில் சீமானுக்கு தம்பி திரைப்படத்தை எடுப்பதற்கு விருப்பம் இல்லை பகலவன் என்கிற திரைப்படத்தைதான் இயக்க நினைத்திருந்தார் சீமான். ஆனால் தம்பி திரைப்படம் இயக்குவதற்குதான் வாய்ப்பு அமைந்தது. எனவே தம்பி படத்தை சீமான் இயக்கினார்.

தம்பி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பகலவன் திரைப்படத்தை இயக்கலாம் என முடிவெடுத்தார் சீமான். இதற்காக மாதவனிடம் பேசினார். ஆனால் பகலவன் திரைப்படம் அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தக்கூடிய கதை அமைப்பை கொண்டிருந்ததால் மாதவன் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

சீமான் கெஞ்சி கேட்டும் கூட அந்த படத்தில் நடிப்பதற்கு மாதவன் ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல மாதவனுக்கு நடனம் ஆட வேண்டும் என்றால் சுத்தமாக ஆகாதாம். இதையும் சீமானே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.