Tag Archives: mathavan

மாதவன்கிட்ட கெஞ்சினேன்! அவன் ஒத்துக்கல! – தம்பி திரைப்படம் குறித்து சீமான் வெளியிட்ட உண்மை!

தற்சமயம் அரசியலில் பெரும் புள்ளியாக இருந்து வரும் சீமான் தமிழில் முதலில் இயக்குனராகதான் அறிமுகமானார். இயக்குனராக அவரது சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

அதில் குறிப்பிட்டு சொல்லும் படியான திரைப்படம் என்றால் மாதவன் நடித்த தம்பி திரைப்படத்தை கூறலாம். தம்பி திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கும் கூட அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைத்தன.

முதலில் சீமானுக்கு தம்பி திரைப்படத்தை எடுப்பதற்கு விருப்பம் இல்லை பகலவன் என்கிற திரைப்படத்தைதான் இயக்க நினைத்திருந்தார் சீமான். ஆனால் தம்பி திரைப்படம் இயக்குவதற்குதான் வாய்ப்பு அமைந்தது. எனவே தம்பி படத்தை சீமான் இயக்கினார்.

தம்பி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பகலவன் திரைப்படத்தை இயக்கலாம் என முடிவெடுத்தார் சீமான். இதற்காக மாதவனிடம் பேசினார். ஆனால் பகலவன் திரைப்படம் அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தக்கூடிய கதை அமைப்பை கொண்டிருந்ததால் மாதவன் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

சீமான் கெஞ்சி கேட்டும் கூட அந்த படத்தில் நடிப்பதற்கு மாதவன் ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல மாதவனுக்கு நடனம் ஆட வேண்டும் என்றால் சுத்தமாக ஆகாதாம். இதையும் சீமானே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரிலீஸான மூணு படத்தில் ஒரு படம் நல்ல ட்ரெண்டிங் ல இருக்கு- என்ன படம் தெரியுமா?

சினிமா ரசிகர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள் என்று கூறலாம். ஏனெனில் வரிசையாக இன்று மூன்று தமிழ் படமும் அதே சமயம் ஒரு ஹாலிவுட் படமும் வெளியாகி உள்ளது.

தமிழில் நடிகர் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் வெளியாகியுள்ளது. விக்ரம் திரைப்படம் வெளியான பொழுதே இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் வெளியீடு தள்ளி போன நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

அதே போல நடிகர் மாதவன் நடித்த ராக்கட்ரி என்கிற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. மூன்றாவது திரைப்படமாக நடிகர் அருள்நிதி நடித்த டி ப்ளாக் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் வெளியான மூன்று திரைப்படங்களில் டி ப்ளாக் திரைப்படம் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் நல்ல திரில்லர் படமாக இது இருப்பதாக கூறப்படுகிறது.

இவை இல்லாமல் ஹாலிவுட் திரைப்படமான மினியன்ஸ் த ரைஸ் ஆஃப் க்ரு திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. மினியன்ஸ் திரைப்படத்திற்கு ஒரு ரசிக பட்டாளம் இருப்பதால் இந்த படமும் கூட வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.