Tag Archives: மாதவன்

மின்னலே பட ரீமேக்கில் எஸ்.கே… மாதவன் கொடுத்த அப்டேட்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இதுவரை காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அமரன் திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களும் வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டதாக உள்ளது. அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களுக்குமே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

sivakarthikeyan

இந்த நிலையில் நடிகர் மாதவனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் நடித்த மின்னலே திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்கிறோம் என்றால் அதில் யார் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த மாதவன் நடிகர் சிவகார்த்திகேயன் அதில் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் காதல் கதைகளில் பெரிதாக நடிப்பதில்லை.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களாக அவர் நடிக்க துவங்கிவிட்டார்.

இதை எல்லாம் இப்ப உள்ள பசங்க இழந்துட்டாங்க.. விளாசிய நடிகர் மாதவன்.!

தமிழ் சினிமாவில் இருந்த சாக்லேட் பாய் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாதவன். ஒரு காலக்கட்டத்தில் நடிகர் மாதவனுக்கு பெரிய மார்க்கெட் ஒன்று இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான மார்கெட் என்பது குறைய துவங்கியது.

மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு ரீ எண்ட்ரியாக இறுதி சுற்று திரைப்படம் அமைந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மாதவன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் மாதவன்.

அதில் அவர் பேசிய விஷயங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. தற்போதைய தலைமுறையினர் எதையெல்லாம் இழந்து உள்ளனர் என பேசுகிறார் மாதவன். அதில் அவர் கூறும்போது பசங்க மொபைலில் என்ன செய்யுறாங்கன்னே கண்டுபிடிக்க முடியல.

அதுவே பயமா இருக்கு. என் வீட்ல அப்படிதான் ரூம்ல ஒரு எட்டு பசங்க ஒன்னா உட்கார்ந்து அமைதியா மொபைல் பார்த்துட்டு இருந்தாங்க. என்ன பண்றாங்கன்னு எட்டி பார்த்தேன். மொபைலில் ரீல்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. ஒருத்தன் ஒரு ரீலை பார்த்து சிரிச்சிட்டு இன்னொருத்தனுக்கு அனுப்புறான்.

அவனும் அதை பார்த்து சிரிக்கிறான். இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் அனுப்பிக்கிறாங்க. நேருக்கு நேர் பேசி சிரிச்சிக்க மாட்டேங்குறாங்க. நம்ம காலத்துல 4 பசங்க கூடிட்டாளே பேசிக்கிட்டுதான் இருப்போம். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.

இப்ப பசங்களுக்கு அந்த கொண்டாட்ட மனநிலையே இல்லாம போச்சு என பேசியுள்ளார் மாதவன்

இந்த உலகத்தில் சாமானியன் பெருசா.. பணக்காரன் பெருசா.. மாதவன் நடித்த Hisaab Barabar பட விமர்சனம்.!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் அதிகமாக திரைப்படங்கள் என எதுவும் வருவதில்லை. ஆனால் அதே சமயம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றன.

அப்படியாக மாதவன் சமீபத்தில் நடித்த திரைப்படம்தான் Hisaab Barabar. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை நேரடியாக ஜீ 5 ஒ.டி.டியில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் கதை அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

படத்தின் கதைப்படி கதாநாயகன் ராதே மோகன் ஷர்மா (மாதவன்) ரயில்வேயில் பயணச்சீட்டு ஆய்வாளராக இருந்து வருகிறார். கணக்கு வழக்கு விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிக்டான ஆளாக இருந்து வருகிறார் ராதே மோகன் ஷர்மா.

ஒரு ரூபாய்க்கு கூட சரியாக அவர் கணக்கு வைத்திருப்பார். அக்கவுண்ட் தொடர்பாக படித்துவிட்டு அதற்கு வேலை கிடைக்காத காரணத்தால் அவர் பயணச்சீட்டு ஆய்வாளராக பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில் டூ பேங்க் என்கிற வங்கியின் முதலாளி தன்னிடம் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களிடம் இருந்து மாதா மாதம் 10 ரூபாய், 20 ரூபாய் என திருடி வருகிறார்.

இப்படியே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 10 கோடி நபர்களிடமும் இதை செய்து வருகிறார் அந்த வங்கி முதலாளி.

இந்த விஷயத்தை எல்லாம் யார் கண்டறியப்போகிறார்கள் என பலரும் நினைத்து வரும் நிலையில் மாதவன் தன்னுடைய வங்கி கணக்கில் காரணமில்லாமல் 26 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை பார்க்கிறார்.

அதற்கு கணக்கு கேட்டு வங்கியை அணுகுகிறார். இப்படி சின்னதாக துவங்கும் இந்த கதை அந்த வங்கிக்கு எதிராக மாதவன் என்னவெல்லாம் செய்ய போகிறார் என செல்கிறது கதை.

ஒரு சாமானியன், ஒரு நுகர்வோர் நினைத்தால் பெரும் நிறுவனத்தையே ஆட்டம் காண வைக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இதன் கதை இருக்கிறது. படத்தில் கடைசியாக மிக சிறப்பான வசனம் ஒன்று வரும். அதாவது மக்கள் எல்லாம் பணக்காரர்கள்தான் இந்த உலகை ஆள்வதாக நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் மக்கள்தான் இந்த உலகை ஆள்கின்றனர் என்பதுதான் அந்த வசனம். ஜீ 5 இல் வெளியாகியிருக்கும் இந்த படம் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.

லாரன்ஸ்க்கு வில்லனாக இந்த நடிகரா?.. லோகேஷின் பென்ஸ் படத்தில் முன்னணி ஹீரோ..!

எல்.சி.யு என்கிற விஷயத்தை உருவாக்கிய பொழுது லோகேஷ் கனகராஜ் எக்கச்சக்கமான கதைகளை எழுதி வைத்துவிட்டார்.. இவர் எழுதிய எல்லா கதைகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு இப்பொழுது எடுக்கப்படும் பென்ஸ் திரைப்படம் கூட கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 3 திரைப்படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. பென்ஸ் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் பெரும்பாலும் நிறைய கதைகளை லோகேஷ் கனகராஜ் எழுதி வைத்திருப்பதால் அவற்றில் சிலவற்றை அவர் தனது உதவி இயக்குனர்களிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

benz

புது நடிகர் எண்ட்ரி:

மேலும் அந்த படங்களை இவரே தயாரித்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில்தான் பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இவர் கதாநாயகன் என்றாலும் கூட கைதி திரைப்படத்தில் இவர் தான் வில்லனாக வருவார் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

இந்த நிலையில் வில்லனுக்கு வில்லன் என்பது போல இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு எதிரியாக ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வகையில் மாதவனும்  எல்.சி.யு யுனிவர்சுக்குள் வருகிறார் என்று இதன் மூலம் தெரிகிறது.

மேடையிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட மாதவன்… ஆடிப்போன நடிகை.. இது வேறயா?.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன் மாதவனை பொருத்தவரை அவருக்கு முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. அலைபாயுதே 100 நாட்களை தாண்டி ஹிட் கொடுத்த ஒரு திரைப்படமாகும்.

இப்பொழுது வரைக்கும் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக அது இருக்கிறது அதற்கு பிறகு மூன்றாவதாக அவர் நடித்த மின்னலே திரைப்படம் தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும். மாதவனைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட் பெற்று வரும் ஒரு நடிகர் என்றுதான் கூற வேண்டும்.

இப்பொழுதும் மாதவன் ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அதை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த ராக்கெட்ரி என்கிற திரைப்படம் அதிக வரவேற்பு பெற்று இருந்தது. இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணன் என்பவரின் சொல்லப்படாத வாழ்க்கையை திரைப்படம் ஆக்கினார் மாதவன்.

தொடர்ந்து வரவேற்பு:

அதை அவரே இயக்கியிருந்தார். அதற்கு முன்பு மாதம் நடித்த விக்ரம் வேதா இறுதிச்சுற்று மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும். வயதான தோற்றத்தில் நடித்தாலும் கூட இப்பொழுது மாதவனின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது.

அவரும் வழக்கமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் மாதவன் செய்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

கேரளாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் காவியா மாதவன் இவர் கேரளாவில் நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிக்கக் கூடியவர் என்று கூறலாம்.

நடிகை சொன்ன விஷயம்:

இவர் நடித்த 5 சுந்தரிகள் மாதிரியான சில திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக பிரபலமான படங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் மாதவன் அவருக்கு விருது வழங்கினார் அப்பொழுது மாதவனிடம் பேசிய காவியா மாதவன் தமிழ்நாடு மக்கள் ஒரு முறை எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்து எனக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தனர்.

ஏன் என்னை பார்க்க இவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது ஏனெனில் நான் தமிழ் படங்களில் நடித்ததே கிடையாது. அதற்கு பிறகு தான் தெரிந்தது காவ்யா மாதவன் என நான் பெயர் வைத்திருப்பதால் என்னை மாதவனின் மனைவி என்று அனைவரும் நினைத்து விட்டனர் என்று கூறியிருந்தார் காவியா மாதவன்.

அதற்கு பதில் அளித்த மாதவன் அதனால் ஒன்றும் பரவாயில்லை நான் என்னுடைய முதல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு இருந்த முதல் வசனமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம் என்பதுதான் என்று கூறியிருந்தார். அட்ஜஸ்ட் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு சாதாரண நிலைக்கு வந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

மாதவனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே என்ன ஆச்சு தெரியுமா?.. சீக்ரெட்டை வெளியிட்ட இயக்குனர்…

Madhavan and Lingusamy :நடிகர் மாதவன் 90களின் சாக்லேட் பாய், பல பெண் ரசிகைகளின் கனவுக்கண்ணன். தமிழ் மட்டுமல்ல பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகர் இன்றும் அவரது ஆரம்ப கால திரைப்படங்களுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.

மாதவன் நடித்த “ரன்” திரைப்படம் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக லிங்குசாமி மாதவனுக்கு போன் கால் செய்து கதை கூற ஆரம்பித்த போது எவ்வளவு நேரம் எடுக்கும் என்று மாதவன் கேட்டார் அதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும் என்று லிங்குசாமி கூற எனக்கு தற்போது நேரம் இல்லை மீண்டும் அழைக்கிறேன் என்று போனை கட் செய்துவிட்டார்.

அதையும் பொறுத்துக்கொண்ட இயக்குனர் லிங்குசாமி மீண்டும் இரண்டாவது முயற்சிக்காக போன்கால் செய்து கேட்ட போது ஒரு மணி நேரத்திற்குள் கதையை கூற முடியும் என்றால் சந்திப்போம் என்று மாதவன் கூறியிருக்கிறார்.

ஒரு சில நாட்களில் மாதவன் இல்லத்திற்கு லிங்குசாமி சென்றுள்ளார். அந்த நேரத்தில் மாதவனும் அவரது மனைவியும் ஒரு நிகழ்விற்காக வெளியே செல்ல ஆயத்தமாகியிருந்தார்கள்.

அந்த நேரத்தில் லிங்குசாமி செல்ல மாதவன் தனது மனைவியிடம் ஒரு மணி நேரம் கொடு கதையை கேட்டுவிட்டு வருகிறேன் என்று கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.

நேரம் ஒரு மணி நேரத்தை கடந்தது, கதையும் இடைவேளையை கடந்தது மாதவன் கதையை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் அவரது மனைவி நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்று கேட்க மாதவனோ கதையை கேட்கும் ஆர்வத்தில் திட்டித்தீர்த்துவிட்டு நீ முன்னால் செல் நான் வருகிறேன் என்று கூறி கதவை மூடி அனுப்பிவிட்டார்.

அதே ஆர்வத்தில் அந்த படத்தில் நடிக்க படம் மெகாஹிட் ஆனது. “ரன்” படம் மாதவன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

என்னங்க இவன் ரொம்ப திமிரா பேசுறான்!.. இயக்குனர் செய்கையால் கடுப்பான மாதவன்!..

தமிழ் இயக்குனர்களில் பலர் நடிகர்களுக்காக கதையை எழுதுவது உண்டு ஆனால் கதையை எழுதிவிட்டு அதற்காக நடிகரை தேடும் சில இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றார் போல அந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் எதிர்பார்ப்பது உண்டு.

அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. இயக்குனர் லிங்குசாமி ஒவ்வொரு படத்திற்கும் கதையை எழுதிவிட்டுதான் அதற்கு கதாநாயகன் யார் என்பதை முடிவு செய்வார். அப்படி அவர் எழுதிய கதை தான் ரன் படத்தின் கதை.

இந்த படத்தின் கதையை அவர் எழுதிய பிறகு அதற்கு கதாநாயகனாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சு போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம் தற்சமயம் மாதவன் மிகவும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். எனவே அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கூறினார்.

எனவே மாதவனுக்கு போன் செய்த லிங்குசாமி, படத்தின் கதையை கூற ஒரு இரண்டு மணி நேரம் எனக்கு அவகாசம் வேண்டும் என்று கூறியிருக்கிறார் அதனை கேட்ட மாதவன் 2 மணி நேரம் எல்லாம் என்னால் கதை கேட்க முடியாது, அரை மணி நேரத்தில் கூற முடியுமா என்று கேட்டிருக்கிறார் மாதவன்.

அதற்கு லிங்குசாமி இல்லை சார் நான் 2 மணி நேரம் கூறி ஆக வேண்டும் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது சொல்லுங்கள் என்று கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். இதனால் கடுப்பான மாதவன் தயாரிப்பாளர் ரத்தினத்திற்கு போன் செய்து என்ன சார் இவன் ரொம்ப திமிரா பேசுறானே என்று கேட்டிருக்கிறார்.

அதனை அடுத்து தயாரிப்பாளர் ரத்தினம் இல்லை அவருக்கு நேரம் ஒதுக்கி கதையை கேளுங்கள். பிறகு உங்களுக்கு பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் பிறகு ஒரு மணி நேரம் மாதவன் லிங்குசாமிக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறார் அந்த ஒரு மணி நேரத்தில் லிங்குசாமி மிகவும் ட்ரிக்காக இன்டர்வல் வரை மட்டுமே கதையை கூறியிருக்கிறார்.

அதனை கேட்டு உற்சாகமான மாதவன் இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்னிடம் முழு கதையையும் கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

மாதவன்கிட்ட கெஞ்சினேன்! அவன் ஒத்துக்கல! – தம்பி திரைப்படம் குறித்து சீமான் வெளியிட்ட உண்மை!

தற்சமயம் அரசியலில் பெரும் புள்ளியாக இருந்து வரும் சீமான் தமிழில் முதலில் இயக்குனராகதான் அறிமுகமானார். இயக்குனராக அவரது சில படங்கள் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன.

அதில் குறிப்பிட்டு சொல்லும் படியான திரைப்படம் என்றால் மாதவன் நடித்த தம்பி திரைப்படத்தை கூறலாம். தம்பி திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கும் கூட அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைத்தன.

முதலில் சீமானுக்கு தம்பி திரைப்படத்தை எடுப்பதற்கு விருப்பம் இல்லை பகலவன் என்கிற திரைப்படத்தைதான் இயக்க நினைத்திருந்தார் சீமான். ஆனால் தம்பி திரைப்படம் இயக்குவதற்குதான் வாய்ப்பு அமைந்தது. எனவே தம்பி படத்தை சீமான் இயக்கினார்.

தம்பி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பகலவன் திரைப்படத்தை இயக்கலாம் என முடிவெடுத்தார் சீமான். இதற்காக மாதவனிடம் பேசினார். ஆனால் பகலவன் திரைப்படம் அரசியல் ரீதியாக பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தக்கூடிய கதை அமைப்பை கொண்டிருந்ததால் மாதவன் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

சீமான் கெஞ்சி கேட்டும் கூட அந்த படத்தில் நடிப்பதற்கு மாதவன் ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல மாதவனுக்கு நடனம் ஆட வேண்டும் என்றால் சுத்தமாக ஆகாதாம். இதையும் சீமானே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.