இந்த உலகத்தில் சாமானியன் பெருசா.. பணக்காரன் பெருசா.. மாதவன் நடித்த Hisaab Barabar பட விமர்சனம்.!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் அதிகமாக திரைப்படங்கள் என எதுவும் வருவதில்லை. ஆனால் அதே சமயம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றன.

அப்படியாக மாதவன் சமீபத்தில் நடித்த திரைப்படம்தான் Hisaab Barabar. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை நேரடியாக ஜீ 5 ஒ.டி.டியில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் கதை அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

படத்தின் கதைப்படி கதாநாயகன் ராதே மோகன் ஷர்மா (மாதவன்) ரயில்வேயில் பயணச்சீட்டு ஆய்வாளராக இருந்து வருகிறார். கணக்கு வழக்கு விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிக்டான ஆளாக இருந்து வருகிறார் ராதே மோகன் ஷர்மா.

ஒரு ரூபாய்க்கு கூட சரியாக அவர் கணக்கு வைத்திருப்பார். அக்கவுண்ட் தொடர்பாக படித்துவிட்டு அதற்கு வேலை கிடைக்காத காரணத்தால் அவர் பயணச்சீட்டு ஆய்வாளராக பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில் டூ பேங்க் என்கிற வங்கியின் முதலாளி தன்னிடம் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களிடம் இருந்து மாதா மாதம் 10 ரூபாய், 20 ரூபாய் என திருடி வருகிறார்.

இப்படியே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 10 கோடி நபர்களிடமும் இதை செய்து வருகிறார் அந்த வங்கி முதலாளி.

இந்த விஷயத்தை எல்லாம் யார் கண்டறியப்போகிறார்கள் என பலரும் நினைத்து வரும் நிலையில் மாதவன் தன்னுடைய வங்கி கணக்கில் காரணமில்லாமல் 26 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை பார்க்கிறார்.

அதற்கு கணக்கு கேட்டு வங்கியை அணுகுகிறார். இப்படி சின்னதாக துவங்கும் இந்த கதை அந்த வங்கிக்கு எதிராக மாதவன் என்னவெல்லாம் செய்ய போகிறார் என செல்கிறது கதை.

ஒரு சாமானியன், ஒரு நுகர்வோர் நினைத்தால் பெரும் நிறுவனத்தையே ஆட்டம் காண வைக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இதன் கதை இருக்கிறது. படத்தில் கடைசியாக மிக சிறப்பான வசனம் ஒன்று வரும். அதாவது மக்கள் எல்லாம் பணக்காரர்கள்தான் இந்த உலகை ஆள்வதாக நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் மக்கள்தான் இந்த உலகை ஆள்கின்றனர் என்பதுதான் அந்த வசனம். ஜீ 5 இல் வெளியாகியிருக்கும் இந்த படம் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version