ப்ரதீப் என்ன எதாவது பண்ணிடுவார்.. என்னை வெளிய விட்ருங்க! – பிக்பாஸிடம் கதறிய மாயா!
Bigboss season & Maya: பிக்பாஸ் வீட்டிலிருந்து அனன்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் என்னையும் வெளியேற்றிவிடுங்கள் இன்று பிக் பாஸிடம் கெஞ்சி வருகிறார் மாயா.
பிக்பாஸ் தொடரின் ஏழாவது சீசன் முந்தைய சீசன்கள் அழகு பரபரப்பாக சண்டையுடன் தொடங்காவிட்டாலும் சின்ன சின்ன சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் ஒரு புரியாத புதிராக பிரதீப் இருந்து வருகிறார். நான் குருவாக மதிக்கிறேன் என்று பிரதீப் சொன்ன பவா செல்லதுரையே பிரதீப் எலிமிநேஷன்க்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு அவரை கண்டு பலரும் அஞ்சுகின்றனர்.
நேற்று இரவு இரண்டு மணியளவில் பிக்பாஸிடம் பேசிய மாயா “நான் இந்த கேம் ரொம்ப ஜாலியா விளையாடலாம்னு வந்தேன். ஆனா இப்ப இங்க இருக்க எனக்கு பயமா இருக்கு. பிரதீப் என்னால புரிஞ்சுக்கவே முடியல. அவர் ஒவ்வொரு சமயமும் ஒரு மாதிரி பேசுறாரு அடிக்கடி மூடு ஸ்விங் ஆகிறார்.
சில சமயங்கள்ல நடு ராத்திரி திடீர்னு முழிச்சு உக்காந்திருக்கார். அவர பாத்தாலே எனக்கு பயமா இருக்கு. எனக்கு பிக் பாஸ் வீட்டை விட்டு போறதுனாலும் எனக்கு அத பத்தி கவலையில்ல. கிச்சன்ல வேற நிறைய திங்ஸ் இருக்கு. அவர் எதையாவது எடுத்து ஏதாவது பண்ணிடுவாருன்னு எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது“ என்று புலம்பியுள்ளார்.
அதற்கு பிக்பாஸ் 24 மணி நேரமும் அனைத்து ஹவுஸ்மேட்ஸையும் ஒரு குழு கண்காணித்து வருவதாகவும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மாயா எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து கேமை விளையாட வேண்டும் என்றும் அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார்.