அர்ச்சனாவை விட அதிக சம்பளம் வாங்கிய மாயா… ஏதும் உள்குத்து இருக்குமோ!..
Maya Salary in Biggboss Tamil : பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 துவங்கியது முதலே இருந்து வருபவர் போட்டியாளர் மாயா. கிட்டத்தட்ட பிக் பாஸில் 104 நாட்களும் இவர் பயணித்து வந்திருக்கிறார். இத்தனைக்கும் பிக் பாஸில் வந்த முதல் இரண்டு வாரங்கள் மாயா எந்த ஒரு விஷயமுமே செய்யவில்லை.
பெரிதாக அவரை யாரும் கண்டுக்கொள்ளவே இல்லை. ஆனால் எப்போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாரோ அப்போது முதல் மாயா தனது விளையாட்டை தொடங்கினார். அர்ச்சனாவை அழச் செய்ததன் மூலம் மாயா அதிகமாக பிரபலமானார்.
அதற்கு பிறகு ஒவ்வொரு வாரமும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு ஏதாவது ஒரு பிரச்சனையை செய்து வந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக கிளம்பினாலும் கூட தொடர்ந்து மக்கள் மனதில் மாயா என்கிற பெயர் நிலைத்து நின்றது.
இந்த நிலையில் பைனல் வரையிலும் வந்த மாயா முதல் மூன்று போட்டியாளர்கள் இடத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இதையே தான் பெரிய கௌரவமாக கருதுவதாக கமலிடம் கூறி வெளியேறினார். இந்த நிலையில் மாயாவிற்கு மொத்தமாக 19 லட்சம் வருமானம் பிக் பாஸ் மூலமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அர்ச்சனாவிற்கு சம்பளமாக கொடுக்கப்பட்ட தொகை இதைவிட குறைவுதான் என்றும் கூறப்படுகிறது. எனவே மாயாவிற்கு மட்டும் எதற்கு அதிக தொகை இத்தனைக்கும் மாயவை விட அர்ச்சனா தானே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற போட்டியாளராக இருந்தார் என்கிற கேள்வி பலர் மத்தியில் வந்தது.
ஆனால் மாயா முதல் நாளில் இருந்து முழுமையாக 14 நாட்கள் போட்டியில் கலந்து இருக்கிறார் ஆனால் அர்ச்சனாவை பொருத்தவரை ஒரு மாதம் கழித்து வைல்டுகார்டு ரவுண்டு மூலமாகத்தான் அவர் போட்டிக்குள் நுழைந்தார் எனவே தான் இந்த சம்பள வித்தியாசம் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.