ஏக்கர் கணக்குல இடம் வச்சிக்கிட்டுதான் மிடில் க்ளாஸ்ன்னு சொன்னியா!.. மாயாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!..
Biggboss maya : பிக்பாஸ் வழங்கிய போது மிகவும் அமைதியான ஒரு போட்டியாளராக இருந்தாலும் கூட இரண்டு வாரங்களிலேயே மக்கள் அனைவரும் அதிகமாக பேசும் ஒரு போட்டியாளராக மாறியவர் மாயா.
அர்ச்சனா உள்ளே வந்த பொழுது மாயா தனது விளையாட்டை தொடங்கினார். அந்த ஒரு வாரத்தில் அவர் செய்த விஷயங்களே இப்போது வரை மக்களால் பேசப்படும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதே சமயம் மாயாவிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் அந்த சமயத்தில் தான் அதிகரித்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் தங்கி ஒரு வாரத்தை கழித்து வருகின்றனர். ஏனெனில் இதற்குப் பிறகு எலிமினேஷன் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் பத்து அல்லது 15 நாட்களுக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாயாவின் அம்மா விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அவர் அவர்களது வீடு ஒரு மலைப் பாங்கான இடத்தில் இருப்பதாகவும் ரப்பர் எஸ்டேட்டிற்கு அருகில் தான் தனது வீடு இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் அவரிடம் ஏக்கர் கணக்கில் இடம் இருப்பதாகவும் அதில் தென்னை மரங்கள், கிழங்குகள் போன்றவற்றை போட்டு வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார் மாயாவின் தாய். ஆனால் மாயா இதற்கும் முன்பு அவரது நண்பர்களிடம் பேசும் பொழுதும் மக்களிடம் வெளிப்படுத்தும் போதும் மிடில் கிளாஸில் இருந்து வந்த சாதாரண பெண் தான் என்று தன்னை கூறியிருந்தார்.
இந்த நிலையில் மிடில் க்ளாஸிற்க்கு என்ன அர்த்தம் என்று யாராவது கூறுங்களேன் என்று கேட்டு நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.