Cinema History
பாலச்சந்தருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!.. மயில்சாமி செய்த காரியம்!..
Actor Mayilsamy : தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் மயில்சாமி மிகவும் முக்கியமானவர். பல நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி நிறைய திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். முக்கியமாக நடிகர் விவேக் உடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மயில்சாமி தனக்கான ஒரு தனி உடல் பாவனையை கொண்டிருப்பதால் அவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் மயில்சாமி குறித்து ஒரு தகவலை காமெடி நடிகரான பெஞ்சமின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
பெஞ்சமின் திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருப்பார். இவர் இயக்குனர் பாலச்சந்தரிடம் நல்ல பழக்கத்தில் இருந்தார். அந்த சமயத்தில் ரஜினி கமல் மாதிரியான பெரும் நடிகர்களே பாலச்சந்தரிடம் கையை கட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவரிடம் மிகவும் உரிமை எடுத்து பழகக் கூடியவராக மயில்சாமி இருந்திருக்கிறார்.
அவர் பாலச்சந்தருக்கு எதிரில் அமர்ந்து மிகவும் சகஜமாக பேசுவார் என்று கூறுகிறார் பெஞ்சமின். இதனால் அதிர்ச்சி அடைந்த பெஞ்சமின் ஒரு முறை இதை மயில்சாமியிடமே நேரடியாக கேட்டு இருக்கிறார். பாலச்சந்தர் எவ்வளவு பெரிய ஆள் நீங்கள் என்ன அவரிடம் சரிக்கு சமமாக அமர்ந்து பேசுகிறீர்கள் என கேட்கும் பொழுது அதற்கு பதில் அளித்த மயில்சாமி பாலச்சந்தருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது அவரும் ஒரு மனிதர் தானே ஒரு இயக்குனர் தானே என்று சகஜமாக கூறியிருக்கிறார்.