அறிவில்லாம எதையாவது செய்ய வேண்டியது!.. நாகேஷின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

Actor MGR and Actor Nageshதமிழின் பழம்பெறும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நாகேஷ். சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்த பிறகு சென்னையில் தி நகர் பகுதியில் தனக்கு சொந்தமான ஒரு திரையரங்கை கட்டினார் அந்த திரையரங்கிற்கு நாகேஷ் திரையரங்கம் என்று பெயர் வைத்தார்.

ஆனால் அந்த திரையரங்கம் திறப்பு விழா நெருங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது தலையில் பெரிய இடி விழுந்தது போல் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது நாகேஷ் திரையரங்கம் சர்ச் பார்க் பள்ளியின் வாசலுக்கு எதிரே கட்டப்பட்டிருந்தது.

ஒரு பள்ளிக்கு எதிரே சினிமா திரையரங்கம் வந்தால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பின் மீது ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்பதால் நாகேஷ் திரையரங்கிற்கு லைசன்ஸ் கிடைக்கவில்லை திரையரங்கை திறக்காமல் போனால் நாகேஷுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் அதனால் மிகவும் நொந்து போனார் நாகேஷ்.

அந்த காலத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் எம்.ஜி.ஆர். நாகேஷ் பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம். மேலும் எம்.ஜி.ஆரும் நாகேஷும் நல்ல நண்பர்கள் கூட. இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் நிச்சயமாக நாம் எம்.ஜி.ஆரை தான் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார் நாகேஷ்.

அதன்படி ஒருநாள் எம்ஜிஆரை சந்திக்க சென்ற நாகேஷ் அவரிடம் தனக்கு நடந்த விஷயத்தை கூறினார். உடனே எம்ஜிஆர் உனக்கு அறிவில்லையா எந்த இடத்தில் திரையரங்கு கட்டினால் லைசன்ஸ் கிடைக்கும் என்ற விவரம் கூட தெரியாமலா திரையரங்கு கட்டுவது என கோபத்தில் கத்தினார். பிறகு அந்த பிரச்சனையை சரி செய்வதாக கூறி அவரை அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் நாகேஷிற்கு போன் செய்த எம்.ஜி.ஆர் பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது என கூறியுள்ளார். எப்படி என பார்க்கும்போது பள்ளியின் வாசலில்தானே திரையரங்கு இருக்க கூடாது என பள்ளியின் வாசலை மறுபக்கம் மாற்றி வைத்துவிட்டார் எம்.ஜி.ஆர். இப்படி ஆட்சிக்கு வந்த பிறகும் கூட தனது நண்பர்களுக்கு எம்.ஜி.ஆர் நன்மைகளை செய்துள்ளார்.