அம்மா மகள் நடிகை என மூவருக்கும் எம்.ஜி.ஆர் கொடுத்த 10 ஏக்கர் நிலம்.. பின்னால் உள்ள ரகசியம்.. ரிப்போர்ட்டர் வெளியிட்ட தகவல்.!

Actress Radha was one of the most popular actresses of the 1990s. Films starring Radha have been huge hits. MGR has helped Radha in this situation

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே பிரபலமான நடிகைகள் என்று ஒரு சிலர் இருப்பது உண்டு. அப்படியாக அக்கா தங்கையாக வந்து தமிழ் சினிமாவில் அதிக பிரபலமடைந்தவர்கள்தான் அம்பிகாவும் ராதாவும்.

அம்பிகாவும் ராதாவும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் அதிக படங்களில் நடித்திருக்கின்றனர். முக்கியமாக அதில் ராதா மிக முக்கியமானவர். ஏனெனில் ராதா நடித்த திரைப்படங்களில் 80 சதவீத திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன.

நடிகை ராதா:

இத்தனை விழுக்காடு வெற்றி படங்களை வேறு எந்த நடிகைகளும் கொடுத்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களை குறித்து பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

radha
radha

அதில் அவர் கூறும்பொழுது பணம் சேர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்பவர்களாக அம்பிகா ராதாவின் குடும்பத்தினர் இருந்தனர். சொல்ல போனால் தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் மட்டுமே ராதா நடித்து வந்தார்.

எம்.ஜி.ஆர் செய்த உதவி:

அந்த அளவிற்கு ராதாவின் மார்க்கெட் என்பது உச்சகட்டத்தில் இருந்தது அவர் அவ்வளவு பெரிய உச்சத்தை அடைவதற்கு அவர் அம்மாவும் முக்கிய காரணமாவார். நடிகர் எம்.ஜி.ஆர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் பொழுது ராதா அம்பிகா மற்றும் அவரது தாயார் மூவருமே சென்று பார்த்தனர்.

அப்பொழுது அவரிடம் சென்ற ராதாவின் தாயார் நீங்கள் ஏவிஎம் ஸ்டுடியோ போல எங்களுக்கு ஒரு ஸ்டூடியோவை போட்டு கொடுப்பீர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் எங்களுக்கு அதை நீங்கள் செய்யவே இல்லையே என்று கேட்டிருந்தார்.

mgr

அதற்காக எம்.ஜி.ஆர் ஏ.ஆர்.எஸ் கார்டன் என்கிற ஒரு இடத்தை 10 ஏக்கர் கொண்ட இடத்தை அம்பிகா ராதா மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு கொடுத்தார். அம்பிகா ராதா மற்றும் அவரது அம்மா ஆகிய மூவரின் பெயரை குறிப்பிடும் வகையில்தான் ஏ ஆர் எஸ் கார்டன் என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டது. அந்த தெருவிற்கும் ஏ ஆர் எஸ் தெரு என்று பெயர் வைக்கப்பட்டது. என்று அந்த தகவலை பகிர்ந்தது இருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.

ஆனால் 10 ஏக்கர் நிலத்தை அவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு எம்ஜிஆருக்கும் ராதா குடும்பத்துக்கும் என்ன பந்தம் இருந்தது என்பது குறித்து அவர் கூறவில்லை.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version