இனிமே வாலி என் படத்தில் பாடல் எழுதக்கூடாது… சின்ன பிரச்சனையால் பெரிய முடிவை எடுத்த எம்.ஜி.ஆர்…

Poet Vaali: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் சினிமா இரண்டு பிரிவாக இருந்தது. அப்போதைய கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் இரண்டு வகையான குழுக்கள் இருந்தனர். எம்.ஜி.ஆரை பின்பற்றும் குழு  ஒன்று. அதேபோல சிவாஜி கணேசனை பின்பற்றும் குழு ஒன்று என இருந்தது.

சிவாஜியை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள்  எம்.ஜி.ஆரை வைத்து பாடம் எடுப்பது கடினமான விஷயமாக இருக்கும் .அதேபோல எம்.ஜி.ஆரை வைத்து தொடர்ந்து படமெடுக்கும் இயக்குனர்கள் சிவாஜியை வைத்து குறைவான படங்களை எடுப்பார்கள்.

இருந்த நிலையில் கண்ணதாசன் மற்றும் வாலியை பொறுத்தவரை அவர்கள் இருவரது திரைப்படங்களுக்குமே பாடல் வரிகளை எழுதி வந்தனர். ஏற்கனவே எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கண்ணதாசன் எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் வரிகளை எழுதுவதை நிறுத்திவிட்டார்.

vaali

ஆனால் வாலி மட்டும் எம்.ஜி.ஆருடன் பல நாட்களாக நெருங்கிய நண்பராக இருந்ததால் தொடர்ந்து அவருக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்தார். இந்த நிலையில் வாலி எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

ஒரு திரைப்படத்தில் வாலி எழுதிய பாடலில் எந்தவித அர்த்தமும் இல்லாதது போல எம்.ஜி.ஆருக்கு தோன்றியது. எனவே அவர் வாலியை அழைத்து இந்த பாடலில் எந்த ஒரு பொருளும் இல்லை எனவே பாடல் வரிகளை மாற்றுங்கள் என கூறிவிட்டார். இதை வாலியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

 உங்களுக்கு பாடல் வரிகள் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக கூறி விடுங்கள் நான் வேறு பாடல் வரிகளை எழுதி தருகிறேன் ஆனால் எனது பாடல் வரிகளில் அர்த்தம் இல்லை என்று கூறாதீர்கள் என்று கூறிவிட்டார் வாலி. சரி இது குறித்து நாளை பேசலாம் என்று கூறியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

 இந்த நிலையில் இரவு வாலிக்கு போன் வந்துள்ளது அதில் பேசிய தயாரிப்பாளர் இனி நீங்கள் எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கு பாடல் வரிகள் எழுத வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் கூறிவிட்டார் என்றார். அதற்கு பதில் அளித்த வாலி எனக்கு கிடைக்கும் ஒன்றை யாராலும் தடுக்க முடியாது அதேபோல எனக்கு கிடைக்காத ஒன்றை யார் நினைத்தாலும் எனக்கு தர முடியாது என்று கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார்.

அதேபோல பிறகு அந்த பாடலுக்கு சரியான வரி எழுதும் ஆள் யாருமே கிடைக்கவே இல்லை இறுதியில் திரும்ப வாலியை அழைத்து பாடல் வரிகளை எழுதினார் எம்.ஜி.ஆர்.