Connect with us

ரஷ்யாக்காரங்களுக்கு என் படத்தை போட வேண்டாம்.. சிவாஜி படத்தை போட்டு காட்டுங்க!. ட்ரிக்காக எம்.ஜி.ஆர் செய்த வேலை!..

MGR sivaji ganesan

Cinema History

ரஷ்யாக்காரங்களுக்கு என் படத்தை போட வேண்டாம்.. சிவாஜி படத்தை போட்டு காட்டுங்க!. ட்ரிக்காக எம்.ஜி.ஆர் செய்த வேலை!..

cinepettai.com cinepettai.com

MGR and Sivaji Gansan : திரைத்துறைக்குள் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே நிறைய போட்டிகள் இருந்தாலும் கூட வெளியில் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.

எம்.ஜி.ஆரும் சரி சிவாஜி கணேசனும் சரி அவர்கள் சுயசரிதை எழுதும் பொழுது மற்றவர்களை பற்றி மிகவும் மேம்படுத்தியே கூறி வந்திருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் தீராத பகை இருந்தது என்னவோ உண்மைதான்.

இந்த நிலையில் ஒருமுறை ரஷ்யாவை சேர்ந்த கலை மற்றும் இலக்கியத்தை சேர்ந்த நபர்கள் சிலர் ஆய்வுக்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தனர் பொதுவாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அரசு சார்ந்த அல்லது என் ஜி ஓ அமைப்பை சார்ந்த நபர்களுக்கு அரசு நல்லவிதமான மரியாதையை கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து தங்க வைத்திருந்தார். கலை மற்றும் இலக்கியம் என வரும் பொழுது அதில் கண்டிப்பாக சினிமாவிற்கும் ஒரு இடம் உண்டு. எனவே தற்சமயம் தமிழில் வந்த ஒரு நல்ல திரைப்படத்தை அவர்களுக்கு போட்டு காட்டலாம் என முடிவெடுத்தனர்.

எம்.ஜி.ஆர் (Actor MGR) அந்த திரையிடலுக்கு வர இருந்தார். எனவே எம்.ஜி.ஆர் திரைப்படமான எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்தை திரையிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை திரையிட வேண்டாம் அதற்கு பதிலாக சிவாஜி கணேசன் (sivaji Ganesan) நடித்த தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanaambaal) திரைப்படத்தை திரையிடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

ஏன் என்று அனைவரும் விழித்த பொழுது தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன்தான் அதேபோல தமிழகத்தின் கலையை தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை விட வேறு ஒரு எந்த திரைப்படமும் சிறப்பாக எடுத்துக் காட்டி விடாதே என்று கூறி அந்த திரைப்படத்தை அந்த வெளிநாட்டவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார் எம்.ஜி.ஆர்.

என்னதான் அவர்களுக்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே நட்பாகதான் இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top