ஊமையன் என்று திட்டிய கூட்டம்!.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை.. அவர் சாகும் வரை தெரியவே இல்லை!..
Purathchi Thalaivar MGR : தமிழில் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்த நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என கூறலாம். மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற எம்.ஜி.ஆர் அதனை தொடர்ந்து அரசியலுக்கும் வந்தார்.
எம்.ஜி.ஆர் வளர வளர அவருக்கென்று இருந்த விரோதிகளும் வளர துவங்கினர். இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு பாதுக்காப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இப்படி இருக்கும்போது ஒருமுறை எம்.ஆர் ராதாவால் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர். எம்.ஆர் ராதா அப்படியான காரியத்தை செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலையில் கழுத்தில் சுடப்பட்டதால் எம்.ஜி.ஆருக்கு பேச்சு வராமல் போனது. சரியான பயிற்சி எடுத்தால் மட்டுமே ஓரளவு பேச முடியும் என கூறியிருந்தார் மருத்துவர். ஒரு அரசியல்வாதி பேச முடியாமல் எப்படி அரசியல் செய்ய முடியும். இதற்கு நடுவே எம்.ஜி.ஆரின் எதிரிகள் அவரை ஊமை என கூறி பரிகாசம் செய்ய துவங்கினார்.
இதனால் கோபமான எம்.ஜி.ஆர் தினமும் நடு ராத்திரியில் நெஞ்சு வரை தண்ணீரில் நின்று கொண்டு மருத்துவர் சொன்ன பேச்சு பயிற்சிகளை எடுத்து வெகு சீக்கிரமே பேச துவங்கினார். இருந்தாலும் அவரை ஊமை என பரிகாசம் செய்தது அவருக்கு ஒரு வடுவாய் இருந்துகொண்டே இருந்தது.
பிறகு எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அவரது சொத்து ஆவணங்களை பார்க்கும்போது அவற்றில் சிலவற்றை வாய் பேச முடியாதவர்களை கவனிக்கும் நிறுவனங்களுக்கு எழுதி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.