சோலிய முடிச்சி விட்டுட்டிங்க போங்க.. A2D சேனலுக்கு எதிராக எழுந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஏ டூ டி நந்தா என்னும் நபரை பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கிறது. ஏ2டி என்பது ஒரு பிரபலமான youtube சேனலாகும்.

இந்த சேனலில் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு வந்து கொண்டிருந்தனர். அவற்றில் பலவும் மக்களுக்கு உபயோகமானதாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கான சப்ஸ்கிரைபர் என்பது அதிகமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் மோசடிகள் குறித்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார் நந்தா. இதனால் அவரது வீடியோ அதிக பிரபலமடைந்தது.

a2d nandha

ஏ2டிக்கு வந்த பதில்:

இந்த நிலையில் தற்சமயம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிடிக்கீ லேப்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தை இவர் நடத்துகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக ஓ.எஸ். களின் கீகளை இவர் விற்பனை செய்து வருகிறார். ஆனால் இது நேர்மையான முறையில் விற்பனை செய்வது கிடையாது என்று இது குறித்து வீடியோ ஒன்று வெளியானது.

அதனை தொடர்ந்து அது குறித்து நந்தா நேற்று விளக்கமும் கொடுத்திருந்தார். இருந்தாலும் கூட அவரை டேக் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினர் ரசிகர்கள். இதனை பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி கண்டிப்பாக மோசடி முறையில் கீ விற்பனை நடந்துள்ளது என்றால் அதற்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.