இறந்தவர்கள் அழைக்கும் மர்ம மொபைல் – ஹாரிகன் போன் திரைப்பட விமர்சனம்
நெட்ஃப்ளிக்ஸில் வெளிவரும் பல திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறுவதுண்டு. அப்படியாக சில தினங்களுக்கு முன்பு நெட்ப்ளிக்ஸில் வெளியான திரைப்படம்தான் ஹாரிகன் போன்.
ஹாரிகன் என்கிற ஒரு மனிதர் இருக்கிறார். அவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார். ஆனால் திருமணம் எதுவும் செய்துக்கொள்ளவில்லை. தனியாகவே இருக்கிறார். வீட்டில் தொழில்நுட்பம் சார்ந்த எந்த பொருட்களையும் அவர் வைத்துக்கொள்வதில்லை. புத்தகம் படிப்பது மட்டுமே அவரது பொழுது போக்காக இருக்கிறது.
இந்நிலையில் அவருக்கு புத்தகம் படித்து காட்டுவதற்காக க்ரிக் என்னும் சிறுவனை பணிக்கு அமர்த்துகிறார். அவன் வாரத்திற்கு மூன்று நாட்கள் என அவருக்கு புத்தகத்தை படித்து காட்டுகிறான். கிட்டத்தட்ட பத்து வருடமாக க்ரிக் அந்த வேலையில் இருந்ததால் ஹாரிகனோடு க்ரிக்கிற்கு நல்ல நட்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு சமயத்தில் க்ரிக் ஒரு மொபைல் வாங்கி அதை ஹாரிகனுக்கு பரிசாக தருகிறான். பிறகு எப்போதும் ஹாரிகன் அந்த போனையே உபயோகப்படுத்தி கொண்டுள்ளார். இப்படியிருக்கும்போது ஒரு நாள் ஹாரிகன் இறந்து போகிறார். அவரது நினைவாக அவரது மொபைலையும் அவருடன் வைத்து புதைக்கிறான் க்ரிக்.
பிறகு ஹாரிகனை மறக்க முடியாமல், அவரது மொபைலுக்கு இவன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான். அதற்கு ரிப்ளே வருகிறது. ஹாரிகன் இறந்த நிலையில் அவரது மொபைலில் இருந்து எப்படி ரிப்ளே வருகிறது என திடுக்கிடுகிறான் க்ரிக்.
பிறகு அவனுக்கு அதனால் பல அசாம்பாவிதங்கள் நடக்க துவங்குகின்றனன. இந்த நிலையில் இருந்து க்ரிக் எப்படி வெளிவர போகிறான்? ஹாரிகன் நல்ல ஆத்மாவா? அல்லது அவனுக்கு தீங்கு இழைக்க கூடியதா? என பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாய் கதை செல்கிறது.
இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் மொழியிலேயே கிடைக்கிறது.