அந்த விஜயகாந்த் படத்தை பார்த்துட்டு எங்கப்பா கண்ணீர் விட்டார்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சோகம்… - Cinepettai

அந்த விஜயகாந்த் படத்தை பார்த்துட்டு எங்கப்பா கண்ணீர் விட்டார்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சோகம்…

தமிழில் பிரபலமான இசைகளை கொடுத்த பிறகும் கூட பெரிதாக பிரபலம் ஆகாமல் இருக்கும் இசையமைப்பாளர்கள் சிலர் உண்டு. தேர்ந்தெடுத்து சில படங்களுக்கு மட்டும் இவர்கள் இசையமைத்திருப்பர். அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இசையமைக்காமல் இருந்திருப்பார்கள்.

அப்படியான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் பரணி. பரணி தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்போது உள்ள மற்ற இசையமைப்பாளர்கள் போல இவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.

ஆனால் தற்சமயம் பல யூ ட்யூப் சேனல்களுக்கு இவர் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பரணி அவரது வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு ஓடி வந்துதான் சினிமாவில் வாய்ப்பு தேடினார். பிறகு முதல் படத்தில் வாய்ப்பு கிடைத்தப்பிறகுதான் அவர் தன் வீட்டிலேயே விவரங்களை கூறினார்.

அவரது இசையில் பெரியண்ணா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் சூர்யா மாதிரியான முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அந்த படத்தை பார்த்த பரணியின் தந்தை உடனே கண்ணீர் விட்டுவிட்டாராம். ஏனெனில் தனது மகன் இவ்வளவு பெரிய படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் என்று அவர் ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார்.

இதை பரணி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version