soorie nayanthara

நயன் தாராவோட ரொமான்ஸ் படம்..! அப்டேட் கொடுத்த நடிகர் சூரி..!

Actor soorie has been a comedy actor and currently he is a rising actor in Tamil. Most of the films in which he plays the lead are well received. In this situation, he has talked about acting with actress Nayanthara

தமிழ் சினிமாவில் நடிகர்கள் எவ்வளவுக்கு மார்க்கெட் வைத்திருக்கிறார்களோ அதே போல ஒரு மார்க்கெட்டை ஒரு நடிகை வைத்திருக்கிறார் என்றால் அது நயன்தாரா மட்டும்தான்.

பெரும்பாலும் நடிகைகளுக்கு பெரிய மார்க்கெட் என்பது சினிமாவில் இருக்காது. அவர்கள் தொடர்ந்து தங்களை சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கடினமான விஷயமாக இருக்கும்.

ஆனால் நயன்தாராவை பொருத்தவரை அவர் தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்தாலும் கூட பெரிய நடிகர்களை போலவே அவருக்கும் வாய்ப்புகள் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. தற்சமயம் கூட அன்னபூரணி திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு அடுத்து மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டில் நடிக்கிறார் நயன்தாரா.

வளர்ந்து வரும் நடிகை:

இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் கவினுக்கு ஜோடியாகவும் நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நடிகர்கள் வயதான பிறகு இளம் நடிகைகளுடன் சேர்ந்து நடித்து தங்களது வயதை குறைத்து காட்டுவார்கள்.

actor soorie

அதே போல நயன்தாராவும் தற்சமயம் அதே ட்ரிக்கை பயன்படுத்துகிறார் அவர் தன்னைவிட குறைந்த வயதுடைய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் மேடையில் நடிகர் சூரியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

சூரியுடன் வாய்ப்பு:

தமிழில் எந்த ஒரு ரொமான்ஸ் திரைப்படம் நடிப்பதாக இருந்தால் எந்த நடிகையுடன் சேர்ந்து நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சூரி உனக்கு எந்த நடிகை பிடிக்கும் என்று அந்த ரசிகரை கேட்டார் அவர் நயன்தாரா என்று கூறினார்.

ஒரு நல்ல கதை அமைந்து நயன்தாராவும் அதற்கு ஓ.கே சொன்னால் கண்டிப்பாக நான் நயன்தாராவுடன் ஒரு ரொமான்ஸ் படம் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார் சூரி. தற்சமயம் சூரியும் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவரது திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்றாலும் கூட காமெடி நடிகருக்கு கதாநாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்புக் கொள்வாரா? என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது.