Connect with us

கடைசி காற்று வீரன் – நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர் எப்படி இருக்கு!..

avatar the last airbender2

Hollywood Cinema news

கடைசி காற்று வீரன் – நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர் எப்படி இருக்கு!..

cinepettai.com cinepettai.com

Last Airbender: 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் சுட்டி டிவி நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. அதற்கு முன்பு வரை தமிழில் கார்ட்டூனுக்கு என ஒரு சேனல் இல்லாதப்போது முதன் முதலாக சுட்டி டிவி வந்தது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்படி ஆரம்பத்தில் சுட்டி டிவியில் ஒளிப்பரப்பான நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவை.

பண்டலேரோ,டோராவின் பயணங்கள், ஜாக்கிச்சான் என அந்த வரிசையில் அப்போது ஒளிப்பரப்பான தொடர்தான் அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர்.

அவதார் கதை:

அவதார் தொடரை நிக்லோடியன் என்கிற கார்ட்டூன் நிறுவனம்தான் உருவாக்கியது. இதன் கதைப்படி நிலம், நீர், காற்று, நெருப்பு என நான்கு தேசங்கள் இருக்கும். இந்த நான்கு தேசத்தில் இருப்பவர்களாலும் அந்தந்த இயற்கை சக்தியை கட்டுப்படுத்த முடியும்.

இவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க அவதார் என்கிற அதிக சக்தி வாய்ந்த பிறவி சுழற்சியாக ஒவ்வொரு தேசத்திலும் பிறப்பார். அவதாரால் இந்த நான்கு இயற்கை சக்திகளையும் கட்டுப்படுத்த முடியும். இந்த நிலையில் உலகையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என நினைக்கும் நெருப்பு ராஜ்ஜியத்திற்கு அவதார் ஒரு இடைஞ்சலாக இருப்பார்.

அடுத்து காற்று தேசத்தில்தான் அவதார் பிறப்பார் என்பதை அறிந்த நெருப்பு தேசத்தினர் மொத்த காற்று தேசத்தையும் அழித்து விடுகின்றனர். அதிலிருந்து தப்பும் ஆங் என்னும் சிறுவன் (அவன் தான் அவதார்) 100 வருடங்களாக பணியில் உறைந்துவிடுகிறான்.

100 வருடத்திற்கு பிறகு ஆங் கண் விழிக்கும்போது நெருப்பு தேசம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எல்லோரும் அவதார் கட்டுக்கதை என நினைக்க துவங்குகின்றனர். இந்த நிலையில் மற்ற வித்தைகளையும் கற்றுக்கொண்டு நெருப்பு ராஜ்ஜியத்தை ஆங் அடக்குவதே இந்த சீரிஸின் கதை.

நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்த அவதார்

கார்ட்டூனாக வெளிவந்த அவதாரை ஏற்கனவே ரியல் படமாக எடுத்தனர். அதற்கு வரவேற்பு கிடைத்தாலும் பிறகு அந்த கதை தொடரப்படவில்லை. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் அதை சீரிஸாக எடுத்துள்ளது.

ஆங் சிறுவனாக இருப்பதற்கு ஏற்றாற் போல இதிலும் ஒரு சிறுவனை தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளனர். அதே போல பல கதாபாத்திரங்களை கார்ட்டூனில் உள்ளது போலவே தேடி பிடித்து போட்டுள்ளனர்.

கார்ட்டூனில் இருந்து தவறிய முக்கியமான விஷயம் என்றால் அது அவதாருக்கு இருக்கும் மாஸ் காட்சிகள்தான். கார்ட்டூனை பொறுத்தவரை ஆங் அவதாராக மாறிவிட்டால் மக்கள் முதல் வீரர்கள் வரை அவரை கண்டு பயப்படுவார்கள்.

ஆனால் அந்த மாஸ் எதுவும் நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸில் இருக்கவில்லை. அவதாராக மாறியப்பிறகும் ஆங் கை தாக்குவதற்கு நெருப்பு வீரர்கள் முயற்சிக்கின்றனர். இது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

இந்த தொடர் தற்சமயம் வரவேற்பை பெற்று வருகிறது.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top