Connect with us

கோலகலமாக நடந்த ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்! – வாழ்த்திய ரசிகர்கள்!

News

கோலகலமாக நடந்த ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்! – வாழ்த்திய ரசிகர்கள்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான “டார்லிங்” படத்தின் மூலமாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.

அதற்கு முன்பாகவே மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சில படங்களிலும் இவர் நடித்திருந்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்து வந்தார்.

இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் 2017ல் வெளியான மரகத நாணயம் படத்தில் சாணக்யா என்ற கதாப்பாத்திரத்தில் நிக்கி கல்ராணி நடித்திருந்தார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆதிக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

Nikki Galrani Wedding

இதுபின்னர் காதலாக மாறிய நிலையில் கடந்த சில தினங்கள் முன்னர் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் நேற்று கோலாகலமாக இவர்களது திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

திருமண புகைப்படங்களை நிக்கி கல்ராணி தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss Update

To Top