மகாராஜா திரைப்படம் மூலமாக உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனராக நித்திலன் சாமிநாதன் இருந்து வருகிறார். இப்பொழுது நித்திலன் சாமிநாதன் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.
மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு பெரிய பெரிய நடிகர்கள் கூட நித்திலனிடம் வந்து வாய்ப்பு கேட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நித்திலன் சுவாமிநாதனிடம் பேசி இருக்கிறார்.
இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த கதைக்களம் எப்படி ஆனதாக இருக்கும் என்பதை குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசி இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது ரஜினிக்காக நித்திலன் ஒரு கதை எழுதுகிறார் என்றால் கண்டிப்பாக அது ஆக்ஷன் திரைப்படமாக இருக்காது. மகாராஜா திரைப்படம் மாதிரியான ஒரு கதை அமைப்பில்தான் தான் இருக்கும்.
எமோஷனலாக ரஜினி நடித்து வருவதற்கான விஷயங்கள்தான் அதிகமாக இருக்குமே தவிர ஆக்சன் காட்சிகள் போன்றவை கண்டிப்பாக நித்திலன் இயக்கும் திரைப்படங்களில் இருக்காது என்று கூறி இருக்கிறார் தனஞ்செயன்.