Nothing நிறுவனம் வெளியிடும் மொபைல்களுக்கு என்று எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் Nothing நிறுவனம் தனது புது மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Nothing phone 3 என்கிற இந்த மொபைல் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்துள்ளது.
பின்பக்கம் மட்டுமே மொத்தம் மூன்று 50 எம்.பி கேமிராக்களை கொண்டுள்ளது இந்த மொபைல். இது இல்லாமல் முன்பக்க செல்ஃபி கேமிராவும் கூட 50 எம்.பியை கொண்டுள்ளது.
5500 எம்.ஏ.ஹெச் பேட்டரி அளவை கொண்ட இந்த மொபைல் 65w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
மேலும் பின்பக்கம் பேட்டரி அளவை காட்டும் எல்.இ.டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி நினைவகம் கொண்ட இந்த மொபைல் 80,000 விலைக்கு விற்பனைக்கு வருகிறது.