

ஆஸ்கர் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டின் மிக பிரபலமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் “கிங் ரிச்சர்ட்ஸ்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெற்றார். ஆஸ்கர் விருது விழாவினை தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் க்றிஸ் ராக் நகைச்சுவையாக வில் ஸ்மித்தின் மனைவியை கிண்டல் செய்ய ஆத்திரமடைந்த வில் ஸ்மித் அவரை மேடையிலேயே அறைந்தார்.
இந்த சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வில் ஸ்மித்தின் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கூடி ஆலோசித்த ஆஸ்கர் விழா கமிட்டியினர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் ஆஸ்கரில் தடை விதித்துள்ளனர். இதனால் வில் ஸ்மித்தின் அடுத்தடுத்த படங்கள் ஆஸ்கருக்கு தேர்வாகாது என்பதால் வில் ஸ்மித்தை நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.