லியோ படத்தில் உள்ள மாதிரி செய்யல.. ஓப்பன் டாக் கொடுத்த பா ரஞ்சித்.!

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து பிரபலமடைந்த ஒரு சில இயக்குனர்களில் பா. ரஞ்சித் முக்கியமானவர். பெரும்பாலும் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு நபராக பா ரஞ்சித் இருப்பதற்கு காரணம் அவர் ரஜினியை வைத்து இயக்கிய இரண்டு திரைப்படங்களே ஆகும்.

அவர் ரஜினியை வைத்து இயக்கிய காலா, கபாலி இரண்டு திரைப்படங்களும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதற்கு பிறகு அவர் இயக்கிய சார்பாட்டா பரம்பரை திரைப்படமும் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

இந்த நிலையில் வெகு காலங்களாக அதிகமாக உழைத்து பா.ரஞ்சித் இயக்கிய திரைப்படம் தங்கலான். ஆனால் அந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவிலான ஒரு வெற்றியை கொடுக்கவில்லை.

தங்கலான் படத்தில் வந்த சங்கடம்:

இந்நிலையில் தங்கலான் திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் பா.ரஞ்சித். இதுக்குறித்து பா.ரஞ்சித் கூறும் பொழுது படத்தில் நிறைய விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே பின்னால்தான் எனக்கு தெரிந்தது. 

முக்கியமாக படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இல்லாததற்கு படத்தின் பட்ஜெட்தான் காரணம் என்று கூறியிருக்கிறார் பா. ரஞ்சித். லியோ திரைப்படத்தில் கிராபிக்ஸ் வேலைகளுக்காக மட்டுமே நான்கு கோடி ரூபாய் ஒதுக்கி இருந்ததாக லோகேஷ் கூறினார்.

ஆனால் எங்கள் படத்தின் மொத்த பட்ஜெட்டே 4 கோடி ரூபாய் தான் அதனால் எங்களால் அந்த அளவிற்கு ஒரு கிராபிக்ஸ் வேலைப்பாடுகளை எங்களது படத்தில் செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார் பா ரஞ்சித்.