நீயா நானாவுக்கு எதிரா அரட்டை அரங்கம்.. புது ஆளை இறக்கும் சன் டிவி..!
இரண்டு தலைப்புகளின் அடிப்படையில் மக்கள் பேசிக்கொள்ளும் நிகழ்ச்சியாக நீயா நானா பல வருடங்களாக மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது.
இப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய வேளையில் நீயா நானா பார்ப்பதற்கு காத்திருக்கும் ஒரு பார்வையாளர் கூட்டம் இருக்க தான் செய்கிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடித்தளமாக இருந்த நிகழ்ச்சிதான் சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் நிகழ்ச்சி. பிரபல இயக்குனரும் நடிகருமான விசுவின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
சன் டிவியின் அடுத்த முடிவு:
சன் டிவியில் மிகப் பிரபலமானது இந்த நிகழ்ச்சி அதற்கு பிறகு சில வருடங்களில் நிறுத்தப்பட்டது. பிறகு விசு ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என்கிற பெயரில் அதே நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
அதற்குப் பிறகு இப்பொழுது நீயா நானா, தமிழா தமிழா மாதிரியான நிகழ்ச்சிகள் அதே பாணியில் வந்து வெற்றி பெற்று வருகின்றன. ஆனால் சன் டிவி அதற்குப் பிறகு அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை துவங்கவே இல்லை.

இந்த நிலையில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை மீண்டும் துவங்குவதற்கு சன் டிவி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக யாரை நிறுத்துவார்கள் என்கிற கேள்வி இருந்து வருகிறது.
பெரும்பாலும் தமிழா தமிழா நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்த கரு பழனியப்பன் அவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை சன் டிவியில் எதிர்பார்க்கலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.